வீடு மற்றும் நிலம் இல்லாதவர்களுக்கான ஆம் ஆத்மி பீமா யோஜனா பற்றி தெரியுமா..?

ஆம் ஆத்மி பீமா யோஜனா ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் கிரமப் புறங்களில் உள்ள வீடு இல்லாத மக்கள் பயன்படுத்திப் பயன் பெறலாம்.

இந்தத் திட்டத்தில் ஆம் ஆத்மி பீமா யோஜனா மற்றும் ஜனஸ்ரீ பீமா யோஜனா இரண்டு திட்டங்களும் இணைந்து செயல்படும் இரு திட்டமாகும். 2013 ஜனவரி 01 முதல் இந்தத் திட்டம் செயல்பட்டு வருகின்றது.

ஆம் ஆத்மி யோஜனா திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவர்கள் அல்லது வீட்டில் சம்பாதிக்கும் ஒருவருக்கு இந்தத் திட்டம் பொருந்தும்.

வயது

வயது

ஆம் ஆத்மி பீமா யோஜனா திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் 18 வயது முதல் 59 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தகுதி

தகுதி

இந்தத் திட்டத்தில் இணைபவர் கண்டிப்பாகக் குடும்பத் தலைவர் அல்லது வீட்டில் சம்பாதிக்கும் ஒருவராக இருக்க வேண்டும் அல்லது வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்க வேண்டும், சொந்தமாக வீடு, நிலம் ஏதும் இல்லாதவராக இருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

தேவையான ஆவணங்கள்

ஆம் ஆத்மி பீமா யோஜனா திட்டத்தில் எண்ணென ஆவணங்கள் தேவை மற்றும் வயது சான்றிதழாக எதனைக் காண்பிக்க வேண்டும் என்று பார்ப்போம்.

1. குடும்ப அட்டை
2. பிறப்புச் சான்றிதழ்
3. பள்ளிப் படிப்புச் சான்றிதழ்கள்
4. வாக்காளர் அடையாள அட்டை
5. நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் அல்லது அரசுத் துறை அளித்த அடையாள அட்டை.
6. ஆதார் கார்டு

 

பிரீமியம்

பிரீமியம்

ஆம் ஆத்மி பீமா யொஜனா திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பும் ஒருவருக்கு 200 ரூபாய் பிரீமியம் கட்டணம். ஆனால் இதனைச் செலுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை. காப்பீடு தொகையான 30,000 ரூபாயினை மத்திய அரசும், மாநில அரசு இணைந்து அளிக்கும். 30,000 ரூபாயில் 50 சதவீதம் சமூகப் பாதுகாப்பு நிதியத்தில் இருந்து மானியம் பெறப்படும்.

நன்மைகள்

நன்மைகள்

இந்தப் பாலிசி திட்டத்தில் இணைந்துள்ளவர்கள் இறக்க நேர்ந்தால் அவரைச் சார்ந்து இருந்தவர்களுக்கு 30,000 ரூபாய் வரை கிடைக்கும். இதுவே விபத்து நேர்ந்தால் கண்கள் அல்லது கைகள் இரண்டும் செயல்படாமல் போனால் சந்தாதார்க்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் 75,000 ரூபாய் வரை கிடைக்கும்.

இதுவே உடலில் ஒரு பகுதி நிரந்தர இயலாமை போன்ற குறைபாடுகள் ஏதேனும் நடந்தால் 37,500 வரை காப்பீடு தொகை கிடைக்கும்.

 

உதவித்தொகை சலுகைகள்

உதவித்தொகை சலுகைகள்

காப்பீட்டுத்தார்களின் குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் இருக்கும் போது 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாதம் 100 ரூபாய் என 6 மாதங்களுக்கு ஒரு முறை உதவித்தொகை ஜூலை 1 மற்றும் ஜனவரி 1ம் தேதி வழங்கப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+