பான், ஆதார் மற்றும் யூஏஎண் மூன்றிலும் பெயர் தவறாக இருந்தால் பிஎப் பணத்தைத் திரும்பப்பெற முடியாது!
பிஎப் பணத்தை இணையம் மூலம் திரும்பப் பெற விரும்பும் பலரை வழுக்காட்டாயமாகப் பிஎப் அலுவலகத்தை நோக்கி வர வைத்துள்ளது.
இதற்கு முக்கியக் காரணம் பான், ஆதார் மற்றும் யூனிவர்சல் கணக்கு எண் ஆகியவற்றில் பெயர் விவரங்கள் சரியாகப் பொருந்தத்து என்றும் கூறப்படுகின்றது.
வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஒரு நிறுவனத்தை விட்டு நின்ற பிறகு பிஎப் பணத்தை இணையம் மூலமாகத் திருப்பப் பெற்றுக்கொள்ளலாம் என்ற சேவையை வழங்கி வருகின்றது.
இணையம் மூலமாகப் பிஎப் பணத்தைத் திரும்பப் பெறுவதில் உள்ள சிக்கல்?
அப்படி இணையம் மூலமாகப் பணத்தைத் திரும்பப் பெற பான், ஆதார் மற்றும் யூஏஎண் போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் இதனைச் சில பிஎப் கணக்கு வைத்துள்ள சந்தாதார்கள் முயலும் போது வெற்றிகரமாகப் பணத்தைத் திரும்பப் பெற முடிவதில்லை. அப்படியானால் அடையாள மற்றும் முகவரி ஆவணங்களைச் சமர்ப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ராஜேஷ் பிள்ளை என்பவரிடம் கேட்டு அறிந்துகொண்ட விவரங்களை இங்கு உங்களுக்காக வழங்கியுள்ளோம்.
விவரங்கள் சரியாகப் பொருந்த வேண்டும்
ஆதார், பான் மற்றும் யூனிவர்சல் கணக்கு எண் மூன்றிலும் உள்ள விவரங்கள் சரியாகப் பொருந்த வேண்டும். அப்படி இல்லை என்றால் பிஎப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான உங்கள் கோரிக்கையினைக் கணினி அமைப்பு ஏற்காது.
திருத்தம்
ஒருவேலை ஆவணங்களில் உங்களது விவரங்கள் சரியாக இல்லை என்றால் உங்கள் விவரங்களை மூன்றிலும் ஒரே மாதிரியாக இருக்கும்படி திருத்தம் செய்ய வேண்டும்.
யூனிவர்சல் கணக்கு எண்ணை எப்படித் திருத்துவது?
வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் இணையதளத்திற்குச் சென்று கூட்டு அறிவிப்புப் படிவத்தை நிரப்பிச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு உங்களது விவரங்கள் யூஏஎண் திருத்தப்பட்டு இணையதளம் மூலமாகப் பிஎப் பணத்தைத் திரும்பப் பெற முடியும்.
கூட்டு அறிவிப்பு படிவத்திற்கான இணைப்பிற்கு இங்குக் கிளிக் செய்யவும்.
கையொப்பம்
விண்ணப்பப் படிவத்தில் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்திடம் இருந்து கையொப்பம் பெற்று வரும் போது வேகமாக இந்தப் பணியை முடிக்க முடியும்.
பிஎப் பணத்தைத் திரும்பப் பெற நிறுவனத்தின் கையொப்பம் அல்லது டிஜிட்டல் கையொப்பம் கட்டாயமாகத் தேவை.
புகார்
ஒரு வேலை நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் கையொப்பம் இட மறுப்பு தெரிவித்தால் வருங்கால வைப்பு நிதி ஆணையம் அலுவலகத்தில் புகர் அளிக்கலாம்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications