ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா வாங்குமா..? மூன்று காரணங்கள்..!

இந்தியாவின் முதல் வணிக விமானப் போக்குவரத்து சேவையை அளிக்கத் துவங்கியது டாடா குழுமம், பின்னர் இந்த நிறுவனத்தின் 51 சதவீத பங்கை அரசு கையகப்படுத்தி தேசிய நிறுவனமாக மாற்றியது.

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஜூன் 1-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் ஏர் இந்தியா நிறுவனம் நட்டத்தில் இயங்கி வருவதால் அதனால் விற்க முடிவு செய்துள்ளதாகவும் அதற்கு ஏற்ற ஒரு நிறுவனத்தைத் தேடி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் விமானப் போக்குவரத்துத் துறையினை ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியார் மயமாக்கலுக்கான சாதகப் பாதகங்களை ஆராயக் கோரியிருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது இது குறித்துத் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

தகவல்

தகவல்

டாடா குழுமத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஒருவரைக் கேட்டபொழுது முன்னால் தலைவர் ரத்தன் டாடாவும், தற்போதைய தலைவருமான என் சந்திரசேகரன் அவர்களும் ஏர் இந்தியா நிர்வாகம் மற்றும் அரசுத் துறைகளுடன் இது குறித்துத் தனித் தனியாக விவாதித்துள்ளதாகவும் கூறினார்.

 விஸ்தரா

விஸ்தரா

டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இரண்டு நிறுவனங்களுக்கு 2015-ம் ஆண்டு இணைந்து விஸ்தரா என்ற விமானப் போக்குவரத்துச் சேவையினை அளிக்கத் துவங்கியுள்ளன.

என்ன ஆகும்?

என்ன ஆகும்?

அதனால் மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியார் மையமாக்குமா அல்லது டாடா குழுமம் 51 சதவீத பங்குகளையும் வாங்குமா என்பது பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.

இந்திய விமானப் போக்குவரத்துத் துறை

இந்திய விமானப் போக்குவரத்துத் துறை

இந்திய விமானப் போக்குவரத்துத் துறை தங்களது பரிந்துரைகளை மத்திய அரசுக்கு ஏற்கனவே அனுப்பி உள்ள நிலையில், அதற்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்தால் தான் விற்பனையா அல்லது பங்குகள் விற்கப்படுமா என்பது எல்லாம் தெரியவரும். அதனால் நாம் விற்பனைக்கான பணிகளில் நீண்ட தொலைவில் தான் இப்போதும் உள்ளோம் என்று கூறுகின்றனர்.

மத்திய அமைச்சகத்தின் கூட்டம்

மத்திய அமைச்சகத்தின் கூட்டம்

மத்திய அமைச்சகம் வியாழக்கிழமை விமானப் போக்குவரத்து துறையுடன் தனியார் மையமாக்கல் குறித்துக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்து இருந்தது. ஆனால் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ரசியாவில் உள்ளதால் இது குறிட்து முழுமையான தகவல்கள் ஏதும் இல்லை. ஆனால் டாட குழுமம் ஏர் இந்தியாவினை கண்டிப்பாக வங்க மூன்று காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று இங்குப் பார்ப்போம்.

முதல் காரணம்

முதல் காரணம்

ஜேஆர்டி டாடா முதன் முதலாக 1932-ம் ஆண்டு டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தைத் துவங்கினர், பினார் 1946-ம் ஆண்டு ஏர் இந்தியா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு 1953-ம் ஆண்டுப் பொதுத் துறை நிறுவனமாக மாற்றப்பட்டது.

இரண்டாவது காரணம்

இரண்டாவது காரணம்

சிங்கப்பூர் ஏர் லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விமானப் போக்குவரத்து சேவை அளித்து வரும் விஸ்தரா நிறுவனத்தினைச் சர்வதேச விமானச் சேவையாக மாற்ற முயற்சி செய்து வரும் நிலையில் ஏர் இந்தியாவைக் கையகப்படுத்தினால் இது எளிமையாகச் சாத்தியமாகும் என்று டாடா குழுமம் நினைக்கின்றது.

மூன்றாவது காரணம்

மூன்றாவது காரணம்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குப் போட்டி நிறுவனங்களால் சிரமான சூழல் உள்ளது. இதுவே ஏர் இந்தியா தன் வசம் இருந்தால் போட்டி நிறுவனங்களை எளிதாகச் சமாளிக்கும்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா வங்கினால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பலம் வாய்ந்த ஒரு விமானப் போக்குவரத்து நிறுவனமாக மாறிவிடும். ஏர் இந்தியா நிறுவனத்தில் டாடா குழுமத்திற்கு அதிகப்படியான பங்கும் உள்ளது.

டாடா குழுமத்தின் விருப்பம்

டாடா குழுமத்தின் விருப்பம்

2000-ம் ஆண்டின் போதே ஏர் இந்தியா நிறுவனத்தில் இருந்து 40 சதவீத பங்குகளை வங்க டாடா குழுமம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் முடிவு செய்து இருந்தன. அப்போது ரத்தன் டாடா ஏர் இந்தியாவை அரசு தனியார் மையமாக்கும் முடிவை எடுக்குமானால் தான் வாங்கத் தயார் என்றும் தெரிவித்தும் இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+