ஆன்லைனில் மருத்து வாங்குவது சரியா..? தவறா..?

கமலா முதல் குழந்தையை பெற்றெடுத்த பின்னர் மீண்டும் தனது அலுவல் பணியை தொடங்கியுள்ளார். பிரசவ விடுமுறையின்போதே அவர் தனது அன்பு குழந்தைக்கு தேவையான பொருட்களை ஆன்லைனில் வாங்கியுள்ளார்.

ஆன்லைனில் குழந்தைக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் அவருக்கு நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. குழந்தைக்கு தேவையான மருந்து பொருட்கள், தடுப்பு நோய் மருந்துகள் உள்பட அவர் அனைத்தையும் ஆன்லைனில் பெற்று நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி ஆர்டர் செய்த மருந்துகள் சரியான முறையில் டோர் டெலிவரியும் செய்யப்பட்டுள்ளது.

கமலாவின் அனுபவம் நல்ல முறையில் இருந்தது என்றால் அதற்கு நேர்மாறாக அவருடைய தோழி விமலாவுக்கு அனுபவம் முற்றிலும் மாறுப்பட்டதாக உள்ளது.

ஆன்லைன் மருந்து

ஆன்லைன் மருந்து

ஆன்லைனில் மருந்து பொருட்கள் வாங்கியதில் அவருக்கு கசப்பான அனுபவம் கிடைத்துள்ளது. அவர் எடையை குறைக்க மருந்து வாங்குவதற்காக இணையதளங்களில் தேடி சென்று ஒரு ஆன்லைன் கடையை கண்டு பிடித்துள்ளார்.

அந்த இணையதளத்தில் குறிப்பிட்டபடி விமலா தன்னுடைய கிரெடிட் கார்ட் மூலம் பணத்தை செலுத்தி தனக்கு தேவையான எடைக்குறைப்பு மருந்தை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு டெலிவரி செய்யப்பட்டது மருந்து போலியான மருந்துகள்.

 

இந்தியாவில்...

இந்தியாவில்...

எனவே இந்தியாவை பொருத்தவரையில் ஆன்லைனில் மருந்துகள் வாங்குவது கமலா போன்றவர்களுக்கு மகிழ்ச்சியான அனுபவமும், விமலா போன்றவர்களுக்கு கசப்பான அனுபவத்தையும் தான் கொடுத்துள்ளது.

மருத்துவர்கள் இதுகுறித்து கலவையான விமர்சனங்களையே முன்வைக்கின்றனர். ஒருசில சலுகைகளை பெற வேண்டும் எனில் ரிஸ்க்குகளையும் சந்தித்துதான் ஆக வேண்டும் என்பதே அவர்கள் கூற்றாக உள்ளது.

 

ஏன் மருந்துகளை ஆன்லைனில் வாங்க வேண்டும்?

ஏன் மருந்துகளை ஆன்லைனில் வாங்க வேண்டும்?

மருந்துகளை ஆன்லனிலின் வாங்குவதற்கு விலை குறைவு மற்றும் வீட்டிற்கே வந்து டோர் டெலிவரி செய்வதால்தான் ஆன்லைனில் வாங்குவதாக கூறப்பட்டாலும் ஒருசில நோய்களுக்கு நேரில் மருந்து வாங்க கூச்சப்படுபவர்கள் ஆன்லைனில் வாங்குவதாக கூறப்படுகிறது.

முக்கிய பிரச்சனைக்குக்கு ஆன்லைன்

முக்கிய பிரச்சனைக்குக்கு ஆன்லைன்

பாலுணர்வு, தூக்கமின்மை, கவலை போன்ற நோய்களுக்கு மருந்து வாங்குபவர்களே பெரும்பாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்வதாக தெரிகிறது.

மேலும் கடைகள் இல்லாத கிராம பகுதி அல்லது நகரத்தில் இருந்து தொலைவில் இருப்பவர்களும், மருந்துகடைகளுக்கு சென்று மருந்துகள் வாங்க முடியாத அளவிற்கு பிசியாக இருப்பவர்களும் தங்களது செளகரியத்திற்காக ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களும் உண்டு

 

விலை குறைவு

விலை குறைவு

மேலும் மருந்து கடைகளை விட ஆன்லைனில் விலை குறைவாக இருப்பதாலும் ஆன்லைனில் மருந்துகள் வாங்க விரும்புவது என்பது மேலும் ஒரு காரணமாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆன்லைனில் வாங்குவதில் உள்ள ரிஸ்குகள்

ஆன்லைனில் வாங்குவதில் உள்ள ரிஸ்குகள்

சட்டவிரோதமாக ஆன்லைனில் வியாபாரம் செய்யும் ஒரு சில மருந்து நிறுவனங்கள் காலாவதி ஆன மருந்துகளையோ, அல்லது வேறு மாற்று மருந்துகளையோ அனுப்புவதற்கு வாய்ப்பு அதிகம்.

ஆனால் இதே தவறு மருந்து கடைகளில் நேரில் வாங்கும்போது சில சமயம் நடைபெறுவது உண்டு என்பதையும் டாக்டர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

 

இதுதான் பிரச்சனை

இதுதான் பிரச்சனை

மருந்து கடையில் விற்கப்படும் அனைத்து மருந்துகளும் ஒரிஜினல் என்பதை ஒரு வாடிக்கையாளர் உணர்ந்து கொள்ள முடியாது. இதே அனுபவம்தான் ஆன்லைனில் வாங்கும் பொழுதும் ஏற்படுகிறது.

மருந்துகள் விற்கப்படுவது மட்டுமல்ல இங்கு பிரச்சனை, விற்பனையாளர்கள் கட்டுப்பாடுகளுடன் வியாபாரம் செய்கின்றார்களா? என்பதே இங்கு பிரச்சனை.

 

 

குழப்பம்..

குழப்பம்..

ஒருசில நேரங்களில் மருந்துகளின் பிராண்ட் பெயர்கள் குழப்பமாக இருக்கும். ஒரே நிறுவனம் ஒரே மருந்தை வெவ்வேறு பெயர்களில் வேறு வேறு நாடுகளில் விற்பனை செய்யும்போது இந்த குழப்பங்கள் ஏற்படும். சில சமயம் ஒரே பெயராக இருக்கும், ஆனால் வேறு வேறு மருந்தாக இருக்கும்.

இதுபோன்ற சமயங்களில் தவறான மருந்துகள் நோயாளிகளுக்கு கிடைக்கும் அபாயமும் ஏற்படுவதுண்டு

 

பாதிப்பு

பாதிப்பு

ஆன்லைனில் சிலசமயம் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால் வீரியம் குறைந்த மற்றும் வீரியம் அதிகமுள்ள மருந்துகள் நோயாளிகளுக்கு மாற்றி செல்லவும் வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

ஆன்லைனில் மருந்துகள் வாங்கும்போது மருத்துவர்களின் பரிந்துரைகளை விற்பனையாளர்கள் கேட்பதில்லை என்பதால் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. ஒருசிலர் தங்களுக்கு தெரிந்த அரைகுறை அறிவின்படி மருந்துகளை வாங்கி பயன்படுத்துவது, போதை மருந்து போன்றவற்றை வாங்குவது ஆகியவை சர்ச்சைக்குரிய விஷயங்களாகிவிடும். இதுகுறித்து சரியான வழிமுறைகள், சட்டங்கள் இன்னும் இல்லை என்பதால் ரிஸ்க்குகள் அதிகம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்

 

 

பயன்கள்

பயன்கள்


ஆன்லைனில் மருந்துகள் வாங்குவது என்னதான் ரிஸ்காக இருந்தாலும் இதனால் ஒருசில நன்மைகளும் உள்ளது. இந்தியாவில் அனைத்து பொருட்களும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் நிலையில் மருந்துகளும் விற்பனை செய்யப்படுவதால் விற்பனை அதிகரிக்கும்.

மேலும் மருந்துகள் தேவைப்படுபவர்களுக்கு குறித்த நேரத்தில் விரைவாக வந்து சேரும் என்பதும் உண்மை

 

ஆன்லைன் மருந்து விற்பனை செய்ய என்ன விதிமுறைகள்

ஆன்லைன் மருந்து விற்பனை செய்ய என்ன விதிமுறைகள்

இந்தியாவை பொருத்தவரை ஆன்லைனில் மருந்துகள் விற்பதற்கு எந்தவிதமான நேரடி சட்டங்களும் இல்லை என்றாலும் ஒருசில மறைமுக சட்டவிதிகள் இதற்கு பொருந்தும்.

மருந்துகள் மற்றும் ஒப்பனை பொருட்கள் சட்டம், 1940, மற்றும் மருந்துகள் மற்றும் அழகுக்கான விதிகள், 1945, அட்டவணை H மற்றும் அட்டவணை எக்ஸ் மருந்துகளின் விற்பனை தொடர்பான வழிகாட்டுதல்கள் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு பொருந்தும்.

ஆன்லைன் மருந்தகம் இந்தியாவில் சட்டவிரோதமானது அல்ல, அது மருந்துகள் மற்றும் அழகு சாதன சட்டத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சில குறிப்பிட்ட கால அளவு மருந்துகள், எக்ஸ் மற்றும் அட்டவணை Y ஆகியவற்றின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகிறன.

 

சவால்கள்

சவால்கள்

ஆன்லைன் மருந்துகள் விற்பனையில் பல சவால்கள் உள்ளன. மருத்துவர்களின் பரிந்துறைகள் உண்மைதானா என்று கண்டறியப்படுவதில்லை. மேலும் மருந்துகள் ஸ்டாக் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் அந்த மருந்துகளுக்கு தேவையான தட்பவெப்ப நிலையில் உள்ளதா? மருந்துகள் கொண்டு வரப்படும்போது பாதுகாப்பான தட்பவெப்ப நிலையில் வைத்து கொண்டு வரப்படுகின்றதா? என்பது குறித்த தெளிவு இல்லை.

நாடு தழுவிய போராட்டம்

நாடு தழுவிய போராட்டம்

இந்தியாவில் உள்ள மருந்துக்கடை உரிமையாளர்கள் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் நாடு தழுவிய போராட்டம் ஒன்றை நடத்தினர். ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதால் தவறான மருந்துகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதோடு போதை பொருட்கள் மற்றும் போலி மருந்துகள் நடமாட்டமும் அதிகமாகிவிடும் என்பதே அவர்கள்

இதுதான் வெற்றி

இதுதான் வெற்றி

ஆன்லைன் மருந்து வியாபாரிகளின் வெற்றி என்பது உண்மையான மருந்துகளை விற்கவும் வாடிக்கையாளர்களுக்கு சரியான மருந்து போய்ச்சேர வேண்டும் என்ற மனப்பான்மையும், மருந்துகள் உண்மையானதாகவும் இருந்தால் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மருந்துகள் மீது நம்பிக்கை தோன்ற ஆரம்பிக்கும்.

பெயர்கள்

பெயர்கள்

இக்கட்டுரையில் குறிப்பிட்ட பெயர்கள் அனைத்தும் கற்பனையே.. மக்களின் இயல்பு வாழ்க்கைமுறையில் சந்திக்கும் பிரச்சனைகளை எடுத்துக்காட்டவே இந்த பெயர் உதாரணங்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+