11,000 ஊழியர்களை வெளியேற்றும் இன்ஃபோசிஸ் காரணம் என்ன? ஆண்டு பொது கூட்டத்தில் அப்படி என்ன நடந்தது?

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 36வது ஆண்டுப் பொதுக் கூட்டம் சனிக்கிழமை பெங்களூருவில் துவங்கியது. அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தின் முக்கிய முடிவுகளை இங்குப் பார்ப்போம்.

பெங்களூரு: இன்ஃபோசிஸ் நிறுவனம் போர்டு உறுப்பினர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும் இடையில் எந்தப் பிரச்சனையும் இல்லை, சிறு விஷயங்களையும் ஊட்டங்கள் தான் ஊதி பெரிதாக்கி உள்ளனர் என்று கூறியுள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 36வது ஆண்டுப் பொதுக் கூட்டம் சனிக்கிழமை பெங்களூருவில் துவங்கியது. அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தின் முக்கிய முடிவுகளை இங்குப் பார்ப்போம்.

முக்கிய அதிகாரிகள் சம்பளம்

முக்கிய அதிகாரிகள் சம்பளம்

ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி நிறுவனம் முக்கிய அதிகாரிகள் இடையில் உள்ள ஊதிய வேறுபாடுகளில் உள்ள சிக்கலை கையில் எடுத்துள்ளதாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

இப்போது உள்ள ஊதிய முறையில் முதன்மையான ஊழியர்களுக்கு உள்ள சம்பள வேறுபாட்டினை குறைக்கப் பங்குகள் அளித்துச் சரிக்கட்ட போர்டு உறுப்பினர்கள் குழு முடிவு செய்துள்ளதாகத் தெரிகின்றது.

 

 

அதிகரித்து வரும் பாதுகாப்புவாதம்

அதிகரித்து வரும் பாதுகாப்புவாதம்

பங்குதாரர்களுக்கு நிர்வாக அதிகாரி விஷால் சிக்கா அனுப்பிய கடிதத்தில், 2017 நிதி ஆண்டில் அதன் சுற்றுச்சூழல் சவால்கள் அதிகரித்து வரும் பாதுகாப்புவாதம், செயல்படுத்தல் துரிதப்படுத்துதல் , அதிகரித்துவரும் வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகள் மற்றும் புதிய போட்டிகள் போன்றவற்றைக் கொண்டு வந்தது என்று தெரிவித்து இருந்தார்.

"உள்நாட்டில், எங்களது கன்சல்டன்சி வர்த்தகத்திற்கும், எங்கள் பினான்ஸ் மற்றும் பிபிஓ வர்த்தகத்திற்கும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுவருவதற்கான சவால்கள் எங்களுக்கு இருந்தன, ஆனால் எல்லாவற்றிற்கும் இடையிலும், விரைவான வளர்ச்சியை ஓட்டி நம் நீண்டகாலப் பணியில் கவனம் செலுத்துவதற்கு இது நமக்கு உதவுகிறது என்று ஷிக்கா குறிப்பிட்டு இருந்தார்.

 

ஆடோமேஷன் எபக்ட்

ஆடோமேஷன் எபக்ட்

ஆடோமேஷன் நுழைவால் நிறுவனத்தில் இருந்து 11,000 ஊழியர்களை வெளியேற்றுவதாக இன்ஃபோசிஸ் அறிவித்துள்ளது. ஆடோமேஷனால் 1.2 ஊழியர்களின் வேலையை ஒருவரே செய்ய முடிகின்றது, அதனால் ஊழியர்கள் பயன்பாடு மற்றும் உற்பத்தித்திறன் மேம்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

விளம்பரதாரர்களிடம் எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை

விளம்பரதாரர்களிடம் எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை

நிறுவனத்தின் குழு வெளியிட்ட அறிக்கைகளை ஊடங்கங்கள் தவறாகச் சித்தரித்துவிட்டன என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் நிர்வாகி ஆர்.ஷேஷசாயி கருத்துக்கள் நிறுவனர்களால் செய்யப்பட்டால், அது மிகவும் தீவிரமாகவும் மரியாதையாகவும் கருதப்படுகிறது. நிர்வாகத் தலைமைகள் வெளியேற்றத்தால் அதிக இழப்பீடுகளை நிறுவனம் சந்தித்துள்ளது.

ரொக்க இருப்பு

ரொக்க இருப்பு

2017 மார்ச் 31 வரை 12,222 கோடி ரூபாய் கையில் இருப்பு வைத்துள்ளதாகவும் இதுவே சென்ற ஆண்டு 24,276 கோடியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. நிறுவனங்களுடன் உள்ள வங்கி வைப்புகளில் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 6,931 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ. 4,900 கோடியாக இருந்தது என்றும் இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

முதலீட்டாளர்கள் பக்கம்

முதலீட்டாளர்கள் பக்கம்

2018 நிதி ஆண்டில் 13,000 கோடி ரூபாய் முதலீட்டாளர்களுக்கு இன்ஃபோசிஸ் அளிக்க முடிவு செய்துள்ளது. இதனை டிவிடண்ட் அல்லது பை பேக்காக அளிக்க இன்ஃபோசிஸ் முடிவு செய்துள்ளது.

டிவிடெண்ட் அறிவிப்பு

டிவிடெண்ட் அறிவிப்பு

இன்ஃபோசிஸ் நிர்வாகம் கடந்த நிதி ஆண்டில் ஒரு பங்கிற்கு 14.75 ரூபாய் டிவிடெண்டாகள் அளிக்க முடிவு செய்துள்ளது. இதற்கான தொகை 4,061 கோடி ரூபாயினைக் கருவூல பங்குகளில் டிவிடெண்டாகக் கார்ப்ரேட் டிவிடெண்ட்டுடன் செலுத்தப்பட்டுள்ளது.

ஆர் சேஷசாயி மே 2018 இல் ஓய்வு பெறுகிறார்

ஆர் சேஷசாயி மே 2018 இல் ஓய்வு பெறுகிறார்

2018-ம் ஆண்டு மே மாதம் ஓய்வு பெற இருப்பதால் இது தான் தன்னுடைய இறுதி ஆண்டுப் பொதுக் கூட்டமாக இருக்கும் என்றும், நிறுவனத்தில் இருந்து ஒரு மென்மையான வழியில் வெளியேற முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+