ஏர் ஏசியாவின் அதிரடி ஆஃபர்.. 950 ரூபாயில் விமான பயணம்..!

குறைந்த கட்டணத்தில் விமானச் சேவை அளித்து வரும் ஏர் ஏசியா இந்தியா நிறுவனம் தற்போது 'பிரவுஸ் புக் போர்டு' என்ற ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது.

ஏர் ஏசியா நிறுவனத்தின் இந்தக் குறைந்த கால டிக்கெட் சலுகையின் மூலமாக 950 ரூபாய் கட்டணத்தில் விமானப் பயணம் செய்யலாம்.

டில்லி, கோவா, பெங்களூரு. ஹைதராபாத், பூனே, கொல்கத்தா மற்றும் இன்னும் பல வழித்தடங்களில் ஏர் ஏசியாவின் இந்த அதிரடி சலுகை ஆஃபரை பயன்படுத்திப் பயணம் செய்யலாம்.

சலுகை காலம்

சலுகை காலம்

ஏர் ஏசியாவின் இந்தச் சலுகை ஆஃபரில் ஜூன் 26 முதல் ஜூலை 2-ம் தேதி வரை புக் செய்து 2017 நவம்பர் 23-ம் தேதி வரையிலான விமானப் பயணங்களை மேற்கொள்ளலாம்.

950 ரூபாய் ஆஃபர்

950 ரூபாய் ஆஃபர்

ஏர் ஏசியா இந்தியா இணையதளம் 950 ரூபாய் கட்டணத்தில் கொச்சி-பெங்களூரு, கோவா-பெங்களூரு, கவுகாத்தி-இம்பால், ஹைதராபாத்-பெங்களூரு வழித்தடங்களி அளித்துள்ளது.

அதுமட்டும் இல்லாமல் இருவழிப் பயணங்களின் போது இந்த ஆஃபர்களைப் பயன்படுத்தலாம்.

 

1250 ரூபாய் ஆஃபர்

1250 ரூபாய் ஆஃபர்

சில வழித்தடங்களில் 1250 ரூபாய் முதல் 5073 ரூபாய் வரை டிக்கெட் கட்டணங்களை ஏர் ஏசியா அறிவித்துள்ளது.

வெளிநாட்டு வழித்தடங்கள்

வெளிநாட்டு வழித்தடங்கள்

உள்நாட்டு விமானப் பயணங்கள் மட்டும் இல்லாமல் வெளிநாட்டு வழித்தடங்களிலும் கோலாலம்பூர், பாலி, மணிலா, சிங்கப்பூர் மற்றும் அதே போன்ற சில வழித்தடங்களுக்கு 7,599 ரூபாய் கட்டணத்தில் விமானச் சேவையை ஏர் ஏசியா அறிவித்துள்ளது.

டிக்கெட் புக் செய்யும் முன்பு கவனிக்க வேண்டியவை

டிக்கெட் புக் செய்யும் முன்பு கவனிக்க வேண்டியவை

1. கிரெடிட், டெபிட் அல்லது ஏதாவது பிற கார்டுகள் பயன்படுத்திச் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் போது செயல்பாடு கட்டணம் திருப்பி அளிக்கப்பட மாட்டாது.
2. டிக்கெட்கள் குறைந்த அளவே கிடைக்கும் . எனவே அனைத்து விமானங்களிலும் சலுகை கிடைக்காது.

ஏர் ஏசியா

ஏர் ஏசியா

ஏர் ஏசியா இந்தியா நிறுவனம் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. இது டாடா குழுமம் மற்றும் மலேஷியன் ஏர் லைன்ஸ் நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+