தெலுங்கானாவில் ரூ.15,000 கோடி ரியல் எஸ்டேட் ஊழல்.. அடிபடும் பெரிய தலைகளின் பெயர்கள்..!

ஹைதராபாத்தில் உள்ள பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் அனைத்தும் பீதியில் உள்ளன. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அதைப் பற்றிய விவரங்களை அரசு சேகரித்து வருவதாகவும் அதன் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.

தெலுங்கானாவில் நடைப்பெற்றுள்ள இந்த ஊழலின் மதிப்பு 15,000 கோடி ரூபாயினைத் தாண்டும் என்று கூறப்படுகின்றது. அந்த ஊழல் பற்றிய முழு விவரங்களை இங்குப் பார்ப்போம்.

ஊழல்

ஊழல்

இந்த ஊழலில் நிலம் பதிவு செய்ய உதவும் அதிகாரிகள் துணையுடன் ஹைதராபாத்தின் மியாபூர் மற்றும் இன்னும் சில இடங்களில் நில ஆக்கிரமிப்பு அதிகளவில் நடந்துள்ளதாகவும் அதற்காகக் கோடிக்கணக்கான பணம் கை மாறியிருப்பதாகவும் நமக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலம் பிரிப்பு

மாநிலம் பிரிப்பு

2014-ம் ஆண்டுத் தெலுங்கான மாநிலம் பிரிந்த பிறகு ஹைதராபாத் ரியல் எஸ்டே சந்தையில் உள்ள ஊழல்கள் நிதானமாக வெளிவரத் துவங்கியுள்ளது.

மோசமான நிலை

மோசமான நிலை

ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு பிரோக்கர் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது ஹைதராபாத்தில் உள்ள ரியல் எஸ்டேட் சந்தை அதிக ஊழல் புரிந்து மிக மோசமான நிலையில் உள்ளது என்று தெரிவித்தார்.

ஆச்சர்யம் இல்லை

ஆச்சர்யம் இல்லை

இந்த ஊழலில் மிகப் பெரிய நிறுவனங்கள் எல்லாம் சிக்கி வருங்காலம் கேள்விக்குறியாக மாறி இருப்பதில் பெரிதாக ஆச்சர்யம் ஒன்றும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மிகப் பெரிய முக்கிய நிறுவனங்கள்

மிகப் பெரிய முக்கிய நிறுவனங்கள்

15,000 கோடி ரூபாய் மதிப்புடைய இந்த ஊழலில் கூகுள், மைக்ரோசாட், திஷ்மன் ஸ்பேயர், ஷர்பூர்ஜி பலோஜி, டிஎல்எப், லேன்கோ, பூர்வன்காரா, சட்வா சாலர்புரியா உள்ளிட்ட மிகப் பெரிய நிறுவனங்களின் பெயர்கள் எல்லாம் அடிப்படுகின்றது.

உறுதி அளிக்காத நிறுவனங்கள்

உறுதி அளிக்காத நிறுவனங்கள்

நடைமுறையில் உள்ள சூழ்நிலைகளின் கீழ், முதலீட்டாளர்கள் அரசாங்கத்தில் இருந்து வாங்கிய நிலம் முறையானதாகவும், சிக்கனமாகவும் இருப்பதாகப் பயன்படுத்தியுள்ளதாக உறுதியளிக்கவில்லை.

அரசின் நிலைப்பாடு என்ன?

அரசின் நிலைப்பாடு என்ன?

டிஆர்எஸ் அரசின் ஐடி துறை அமைச்சர் கே டி ராமா ராவ் முதலீட்டாளர்களைச் சந்தித்துத் தற்போதைய நிலவரம் குறித்து விவாதிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த இடங்கள் எல்லாம் முதலீட்டாலர்கள் நிறுவனத்திற்கு நீண்ட காலத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது, இது ஒரு நீண்ட கால் பிரச்சனை. தற்போது நிலைமையைச் சரிசெய்வதுடன், சர்ச்சைக்குரிய நிலம் பதிவுகளை வரிசைப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

 

நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம்

நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம்

இந்த ஊழல் வெளியாகியுள்ளதால் தெலுங்கானாவிற்கு வருகின்ற முதலீடுகள் குறைய வாய்ப்பு இருந்தாலும் முதலீட்டாளர்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் சொத்துக்கள் மீது உள்ள கறையினை நீக்கிக்கொள்வது அவசியமாக்கப்பட்டுள்ளது.

அரசும் விரைந்து நடவடிக்கை எடுத்து அனைத்து நில விவரங்கள் கோப்புகள் அனைத்தையும் டிஜிட்டல் ஆக்க வேண்டிய காட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது, இதன் மூலம் முதலீட்டாலர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து நிலங்களைக் காப்பாற்ற முடியும் என்றும் கூறப்படுகின்றது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+