அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் ,இந்தியாவின் மலிவுவிலை விமான சேவை அளிக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு நன்றி கூறியுள்ளார்.
ஆம், உண்மையில் டிரம்ப் நன்றி கூறியுள்ளார். எதற்காக தெரியுமா..?
ஸ்பைஸ்ஜெட்
அமெரிக்காவின் முன்னணி பயணிகள் விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் உடன் சுமார் 205 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் இத்துறையில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக காரணமாக இருக்கிறது என ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு நன்றி கூறியுள்ளார் டிரம்ப்
22 பில்லியன் டாலர்
ஸ்பைஸ்ஜெட், போயிங் நிறுவனத்துடன் சுமார் 22 பில்லியன் டாலர் மதிப்புள்ள 205 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் சுமார் 1,32,000 திறன் வாய்ந்த, அதிக சம்பளம் வாங்கக்கூடிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என அமெரிக்க காமர்ஸ் துறை தெரிவித்துள்ளது.
வில்பர் ராஸ்
இந்நிலையில் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தில் வர்த்தக செயலாளராக இருக்கும் வில்பர் ராஸ் அவரின் தனியார் முதலீட்டு நிறுவனமான வில்பர் ராஸ் அன்ட் கோ ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் 2008ஆம் ஆண்டு சுமார் 86 மில்லியன் டாலர் முதலீடு செய்தது.
இதன்பின் 2010ஆம் ஆண்டு இதில் 30 சதவீத பங்குகளை 127 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்துள்ளது இந்த முதலீட்டு நிறுவனம்.
குத்தகை
இந்நிலையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 205 விமானத்தையும் வாங்க போவதில்லை, சில எண்ணிக்கையிலான விமானத்தை முழுமையாக வாங்கவும், மீதமுள்ளதை குத்தகை முறையில் எடுத்து இயக்கவும் முடிவு செய்துள்ளது.
விமான போக்குவரத்து
இந்தியாவில் விமான போக்குவரத்தின் வளர்ச்சி 14.6 சதவீதம் வரை கடந்த வருடம் வளர்ச்சி அடைந்துள்ளது. சீனாவில் இதன் அளவு 15.1 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications