ஜியோ உடனான போட்டி உச்சம்.. டாடா டெலிசர்விசஸ் நிறுவனத்தை வாங்கும் ஏர்டெல்..!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் ஜியோவை அறிமுகம் செய்த பின்பு இந்திய டெலிகாம் சந்தையில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்களை அடைந்தது நாம் அனைவருக்கும் அறிந்த ஒன்று.

இதில் முக்கியமாக ஜடியா நிறுவனத்தின் முதல் வருவாய் சரிவு, ஏர்டெல் நிறுவனத்தின் 70 சதவீத லாபம் இழப்பு என அடுக்கி கொண்டே போகலாம்.

ஆனால் ஜியோ-வின் போட்டி மற்றும் ஆதிக்கத்தைச் சமாளிக்க டெலிகாம் நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை நிலைநாட்டிக்கொள்ளவு, தொடர்ந்து சந்தையில் நிலைத்திருக்கவும் நிறுவனங்களை வாங்கி வருகின்றனர்.

ஏர்டெல் - டாடா டெலிசர்வீசஸ்

ஏர்டெல் - டாடா டெலிசர்வீசஸ்

இந்நிலையில் லண்டனே சேர்ந்த குளோபல் மொபைல் மற்றும் வயர்லெஸ் சந்தை ஆய்வு நிறுவனமான சிசிஎஸ் இன்சைட் வெளியிட்ட அறிக்கையின் படி இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணியாக இருக்கும் பார்தி ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தை முமுமையாகக் கைப்பற்ற அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இதுமட்டும் மட்டு ம் இந்த ஆய்வறிக்கையில் பல முக்கியதகவல்களை வெளியிட்டுள்ளது.

 

டாடா டெலிசர்வீசஸ் - பிஎஸ்என்எல்

டாடா டெலிசர்வீசஸ் - பிஎஸ்என்எல்

தற்போதைய நிலையில் தனியாக நிற்கும் பெரிய நிறுவனங்களில் மோசமான வர்த்தகத்தைப் பெற்று வருவது டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் தான்.

இந்நிலையில் இதன் நிலைப்பாடு இதுவரை யாருக்கும் தெரியவில்லை. மேலும் இந்த ஆய்வறிக்கையின் படி டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்திற்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளது, ஒன்று ஏர்டெல் நிறுவனத்துடன் கூட்டணி சேர்வது (முழுமையாக விற்பனை செய்வது), மற்றொன்று..

பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் சேர்ந்து தனது வர்த்தகத்தையும் சேவையையும் விரிவாக்கம் செய்வது. என இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

 

4 நிறுவனங்கள்

4 நிறுவனங்கள்

Halcyon Days Ahead in a Four-Operator Market என்ற தலைப்பில் வெளியான இந்த ஆய்வறிக்கையில் 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் வெறும் 4 டெலிகாம் நிறுவனங்கள் தான் இருக்கும்.

இவை மட்டுமே இந்திய டெலிகாம் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும், மேலும் புதிதாகக் களமிறங்கத் திட்டமிடும் நிறுவனங்களுக்கு இச்சந்தையில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

 

வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர்கள்

இந்நிலையில் இந்த 4 நிறுவனத்தில் 3 நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களாகவும், ஒரு பொதுத்துறை நிறுவனமாகவும் இருக்கும். அதில் தனியார் நிறுவனங்களுக்குச் சராசரியாக 300 மில்லியன் வாடிக்கையாளர்களையும், பொதுத்துறை நிறுவனம் மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டு இருக்கும் எனத் தெரிகிறது.

ரிலையன்ஸ்

ரிலையன்ஸ்

மேலும் 2020ஆம் ஆண்டுக்குள் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தனித்துப் போட்டியிடும்.

தற்போது இருக்கும் நிஸையில் ஜடியா-வோடபோன் மற்றும் ஏர்டெல் கூட்டணி நிறுவனங்கள் என இந்திய டெலிகாம் நிறுவனங்களில் மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்கப்போகிறது.

 

ஏர்டெல் ஏன் வாங்க வேண்டும்..

ஏர்டெல் ஏன் வாங்க வேண்டும்..

ஜியோவின் அறிமுகம் மற்ரும் ஜடியா - வோடபோன் கூட்டணி அறிவிப்பு ஏர்டெல் நிறுவனத்தின் ஆதிக்கத்தைப் பதம் பார்த்துள்ளது.

இதன் காரணமாகச் சந்தையில் இருக்கும் தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒற்றைக் காரணத்திற்காக ஏர்டெல், யூனிநார், டிக்கோனா-வின் பிராண்ட்பேன்ட் வர்த்தகம் ஆகியவற்றை வாங்கி ஆதிக்கத்தைச் செலுத்துகிறது.

இதுவே தற்போது ஏர்டெல் நிறுவனத்தின் பலவீனம்.

 

டாடா டெலிசர்வீசஸ்

டாடா டெலிசர்வீசஸ்

இதன் மூலம் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தை ஏர்டெல் வாங்குவது அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.

டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் வருடத்திற்குச் சுமார் 9,500 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது. ஆனால் இதன் வாடிக்கையாளர்கள் தற்போது அதிகளவில் வெளியேறி வரும் காரணத்தால் இந்நிறுவனத்தின் வளர்ச்சி மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+