ஆதார் கார்டுடன் மொபைல் எண்ணை இணைப்பது கட்டாயம். அப்படிச் செய்யவில்லை என்றால் ஆதார் கார்டினை பான் கர்டுடன் இணைப்பது, வருமான வரி தாக்கல் செய்யும் போது மின்னணு சரிபார்ப்புச் செய்ய எனப் பலவற்றை உங்களால் செய்ய முடியாது.
எனவே உங்கள் ஆதார் கார்டில் மொபைல் எண்ணைப் பதிவேற்ற வேண்டும் என்றால் பின் வரும் படிகளை நீங்கள் பின்பற்றுங்கள்.
படி 1: ஆதார் மையத்திற்குச் செல்லுங்கள்
உங்கள் ஆதார் கார்டில் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய முதலில் அருகில் உள்ள ஆதார் மையத்தை அணுகவும். இதனை இணையம் மூலமாகப் பதிவு செய்ய முடியாது.
படி 2: படிவம்
ஆதார் கார்டின் விவரங்களைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்திச் செய்து சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் படிவத்தை இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
படி 3: அடையாள ஆவணங்களை இணைக்கவும்
திருத்துவதற்கான படிவத்தை அளிக்கும் போது பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், மின்சாரக் கட்டணம் பில் போன்றவற்றில் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
படி 4: பையோமெட்ரிக் விவரங்கள் சரிபார்ப்பு
ஆதார் மையத்தின் ஊழியர் உங்களது பையோமெட்ரிக் தரவுகளைச் சரிபார்த்து உறுதிச் சீட்டினை அளிப்பார்.
படி 5: தேவைப்படும் கால அவகாசம்
உங்கள் ஆதார் கார்டில் புதுப்பிக்கப்பட்ட விவரங்கள் முழுமையாகத் திருத்தப்பட 10 நாட்கள் வரை காலக்கெடு எடுத்துக்கொள்ளும். ஏற்கனவே நீங்கள் ஒரு மொபைல் எண்ணைப் பதிவு செய்து இருந்து அந்த எண்ணைப் பயன்படுத்தும் போதே புதிய எண்ணிற்கு மாற்ற வேண்டும் என்றால் இணையதளம் மூலம் மாற்றுக்கொள்ளாம்.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications