பீனிக்ஸ் பறவையாய் எழுந்த ஸ்பைஸ்ஜெட்..!

ஸ்பைஸ்ஜெட்... நாட்டின் முன்னணி மலிவுவிலை விமான போக்குவரத்து சேவை அளிக்கும் நிறுவனம்.

இரண்டரை வருடத்திற்கு முன்பு எரிபொருள் வாங்கியற்கான 2.2 மில்லியன் டாலர் பணத்தை செலுத்த முடியாமல் முழுமையாக தரையிறங்கப்பட்டது. விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தை இதுவும் முழுமையாக முடங்கிவிடும் என அனைவரும் எதிர்பார்த்த ஒரு நிறுவனம் தான் ஸ்பைஸ்ஜெட்.

ஆனால் இன்று இந்திய விமான போக்குவரத்தில் மூடிசூடா மன்னாக விளங்கும் மாபெரும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.

வரலாறு காணாத சரிவு

வரலாறு காணாத சரிவு

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கலாநிதி மாறன் தலைமையில் இருக்கும்போது புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், ஈர்க்கப்பட்ட வாடிக்கையாளர்களை தொடர்ந்து சலுகை, தள்ளுபடி என வாரி வழங்கியது.

இதனால் இந்நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் தக்கவைக்கப்பட்டது. ஆனால் வருவாயும், லாபமும் வரலாறு காணாத விதிமாக சரிந்தது.

 

கலாநிதி மாறன் டூ அஜய் சிங்

கலாநிதி மாறன் டூ அஜய் சிங்

இந்நிலையில் அப்போது ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீட்டாளராக இருந்த கலாநிதி மாறன் பல்வேறு காரணங்களுக்காக இந்நிறுவனத்தில் இருந்த தனது பங்கு இருப்பை குறைந்துக்கொண்டும் நிர்வாகத்தை விட்டும் வெளியேறினார்.

இதன் மூலம் ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் மீண்டும் தனது ஆஸ்தான நிறுவனரான அஜய் சிங் கையில் வந்தது.

 

வெற்றிக்கொடிக்கட்டு பாட்டு போல..

வெற்றிக்கொடிக்கட்டு பாட்டு போல..

அஜய் சிங் தலைமையை ஏற்றுக்கொண்ட பின்பு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் புதிய முதலீட்டை கொண்டு வந்து, பல செலவின குறைப்பு, அதிகம் வர்த்தகம் அளிக்காத வழிதட சேவையை நிர்ததம், அதிக வருவாய் அளிக்கும் வழித்தடத்தில் சேவை விரிவாக்கம் என பல அதிரடி நடவடிக்கைகளை செய்தார்.

இதன் வெறும் இரண்டரை வருடத்தில் உலகில் வேகமாக வளர்ந்து வரும் பயணிகள் விமான சேவை நிறுவனமாக ஸ்பைல்ஜெட் உயர்ந்துள்ளது.

 

சாதகமான வாய்ப்புகள்

சாதகமான வாய்ப்புகள்

இந்த காலக்கட்டத்தில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்த காரணத்தினால் இதன் வருவாய் மற்றும் லாப அளவுகள் தொடர்ந்து உயர்ந்தது.

மேலும் இந்த காலக்கட்டத்திலும் பல சலுகை மற்றும் தள்ளுபடிகளை ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

124 சதவீத வளர்ச்சி

124 சதவீத வளர்ச்சி

இதன் மூலம் 2017ஆம் ஆண்டில் மட்டும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சுமார் 124 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிறுவனத்தின் மோசமான காலமார டிசம்பர் 2014ஆம் ஆண்டில் இருந்து மட்டும் சுமார் 800 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1.2 பில்லியன் டாலர்

1.2 பில்லியன் டாலர்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தொடர் வளர்ச்சி மூலம் இந்நிறுவனத்தின் மதிப்பு தற்போது 1.2 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 7744.8 கோடி ரூபாய்.

டொனால்டு டிரம்ப்

டொனால்டு டிரம்ப்

இந்நிலையில் ஸ்பைஸ்ஜெட் தனது புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை கவர்ந்த காரணத்தினால், டிரம்ப் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு நேரடியாக நன்றி தெரிவித்துள்ளார்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+