மென்பொருள் தயாரிப்பு மற்றும் சேவையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் காக்னிசென்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தில் அளிக்கப்படும் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றை 3 மாதங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.
இதற்கு ஐடித் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பும், அமெரிக்க விசா கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டியுள்ளது காக்னிசென்ட்.
ஊழியர்களுக்கு மின்னஞ்சல்
இதுகுறித்துக் காக்னிசென்ட் நிறுவனத்தின் தலைமை மக்கள் அதிகாரி இந்நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
இதில் 2017ஆம் ஆண்டுக்கான சம்பள உயர்வு ஜூன் மாத்தில் இல்லை என்றும், ஆக்டோபர் 1ஆம் தேதி அனைவருக்கும் அளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் முக்கியமான சில செய்திகளையும் தனது ஊழியர்களுக்கு அளித்துள்ளார்.
சம்பள உயர்வு
அசோசியேட்ஸ் முதல் மேனேஜர் வரையில் உள்ள அனைத்து ஊழியர்களுக்குத் தங்களது அடிப்படை சம்பளத்தில் சில சதவீதம் அதிகமாகக் கிடைக்கும். உயர் மேலாளர் மற்றும் அதற்து அதிகமான பதவிகளில் இருக்கும் ஊழியர்களுக்குப் பேஅவுட் ஆகப் பெரிய தொகை கிடைக்கும். இது ஒவ்வொரு மாத சம்பளத்திலும் பிரித்து அளிக்கப்படும்.
மேலும் அவர்களுக்குப் போனஸ் தனியாக அளிக்கப்படும்.
பதவி உயர்வு
அசோசியேட்ஸ் விபி மற்றும் விபி பதவிகளில் இருக்கும் ஊழியர்களான பதவி உயர்வு விரைவில் அறிவிக்கப்படும். ஆனால் அவர்களது பணி அக்டோபர் 1முதல் துவங்கும்.
தனித்தனியாக
அசோசியேட்ஸ் விபி மற்றும் விபி அதிகாரிகளின் பதவி உயர்வு தனித்தனியாக அறிவிக்கப்படும். இந்நிலையில் 2017ஆம் ஆண்டுச் சிறப்பாக இருக்கும் வகையில் வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது இதில் உயர் அதிகாரிகளுக்குத் தங்களின் பணிகளில் மாற்றம் ஏற்படலாம்.
பணிநீக்கம்
நிறுவனத்தில் அதிரடியாக ஊழியர்களை ராஜினாமா செய்ய வைப்பதாகச் செய்திகள் வந்த நிலையில், இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதிகமாகக் கடந்த மாதம் காக்னிசென்ட் தலைவர் ராஜீவ் மேத்தா ஊழியர்கள் யாரும் வேலையை விட்டு வெளியேற்றப்பட மாட்டார்கள் என மன்னஞசல் அனுப்ப காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நிறுத்தம்...
இந்தியாவில் முதன் முதலில் இந்த வருடம் ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம் காக்னிசென்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இந்நிறுவன ஊழியர்கள் ஐடி யூனியன் மூலம் மனு அளித்து இப்பிரச்சனை மிகப்பெரியதாக வெடித்தது.
பின்வாங்கியது
இதன் பின் காக்னிசென்ட் நிறுவனம் ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையில் இருந்து பின்வாங்கியது.
மொத்த ஊழியர்கள்
தற்போதைய நிலையில், காக்னிசென்ட் நிறுவனத்தில் சுமார் 2,62,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 1,50,000 பேர் இந்தியாவில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்போசிஸ்
சொல்லப்போனால் இதேபோன்ற நடவடிக்கையைத் தான் தற்போது இன்போசிஸ், டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களும் கையாண்டுள்ளது.
ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதைக் காட்டிலும் 3 மாதம் சம்பள உயர்வைக் குறைப்பதன் மூலம் பெரிய அளவிலான செலவுகளைக் குறைக்க முடியும் என்பது இந்திய ஐடி நிறுவனங்களின் நம்பிக்கை.
ஜிஎஸ்டி படுத்தும் பாடு
இந்திய நிறுவனம்
ஜூலை 1
சோகம்
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications