தனியார் விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ எக்ஸ்பிரஸ் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது என்று இந்திய விமானப் போக்குவரத்து சேவைத் துறையின் செயலாளர் ஆர் எண் சவுபே இன்று தெரிவித்தார்.
அதுமட்டும் இல்லாமல் மேலும் சில உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவை நிறுவனங்களும் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டு வருகின்றது.
கடனில் உள்ள பங்கு விற்பனைக்கு
நேற்று இரவு மத்திய அமைச்சகம் நிதி ஆயோக்கின் பரிந்துரையை ஏற்று ஏர் இந்தியாவின் பங்குகளை விற்க அனுமதி அளித்துள்ளது. அதனால் 32,000 கோடி ரூபாய் கடனில் உள்ள ஏர் இந்தியாவின் பங்குகள் விற்பனைக்கு வந்துள்ளது.
தலைமை பொறுப்பு ஏற்ற ஜேட்லி
அரசின் கடன் குறித்த முழு விவரங்கள் தெளிவாகத் தெரியவில்லை. அதே நேரம் இதற்குத் தலைமை பொறுப்பு ஏற்றுள்ள நிதி அமைச்சர் அருண் ஜேட்லி எவ்வளவு பங்குகள் விற்பனை செய்யப்படும் என்றும் எப்படி ஏர் இந்தியாவின் சொத்துக்கள் மற்றும் கடன் எப்படி அளிக்கப்படும் என்று முடிவு செய்ய வேண்டும்.
இண்டிகோ
இந்தியாவின் உள்நாட்டு விமானச் சேவையில் இண்டிகோ தான் முதன்மையான நிறுவனம் என்பதும் அதிகளவில் சந்தையை ஆக்கிரமிப்பு செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சந்தை மதிப்பு
ஏர் இந்தியாவின் சந்தை மதிப்பு குறையும் போது இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்கள் சந்தை மதிப்பு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
கடன் தொகை
ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது 2012-ம் ஆண்டு இருந்த கடனுக்காக 30,000 ரூபாயினை மத்திய அரசு அளித்தது. அதற்குப் பிறகு 2015-2016 நிதி ஆண்டில் தான் நட்டத்தில் இருந்த நிறுவனம் லாபத்தில் இயங்கத் துவங்கியது.
டாடா குழுமம்
70 வருடங்களுக்கு முன்பு டாடா குழுமத்தின் கையில் இருந்த நிறுவனம் ஏர் இந்தியா என்பதால் அவர்கள் வாங்க அதிக வாய்ப்புள்ளதாகவும் நமக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது குறித்து டாடா குழுமம் பெரிதாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications