இந்தியாவில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டை தடை செய்யப்பட்ட பின்பு நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் நாட்டின் பணபுழக்கத்தை சீர்செய்ய பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ரிசர்வ் வங்கி புதிதாக 200 ரூபாய் நோட்டை வெளியிட முடிவு செய்துள்ளது.
அது புதுசல்ல இருக்கு..
கடைசி கட்டம்...
நாட்டின் பணபுழக்கத்தை சீர்செய்யும் பொருட்டு, ரிசர்வ் வங்கி தனது கடைசி கட்ட திட்டமாக இந்திய வரலாற்றில் முதல் முறையாக 200 ரூபாயை வெளியிட முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் சாமாணியர்கள் மத்தியில் பணபுழக்கம் எளிமையானதாக இருக்கும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
அச்சடிக்க துவக்கம்..
இந்நிலையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் அச்சகத்தில் ரிசர்வ் வங்கி புதிய 200 ரூபாய் நோட்டை அச்சடிக்கும் பணிகளை துவங்கியுள்ளது.
ஆனால் இதுக்குறித்து ரிசர்வ் வங்கி எவ்விதமான அறிவிப்புகளையும் வெளியிடவில்லை.
சாதகமானது..
மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் 2000 ரூபாய் அறிமுகம் செய்தபோது மக்கள் மத்தியில் சில்லறை மாற்றத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையாக விளங்கியது. ஆனால் தற்போது ரிசர்வ் வங்கி செயல்படுத்தி வரும் திட்டத்தின் படி 200 ரூபாய் நோட்டு என்பது பல வழிகளில் சாமானியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
கருப்பு பணம்
ஆனால் இதனை மத்திய அரசின் கருப்பு பண ஒழிப்பு கண்ணோட்டத்தில் பார்க்கும் போது பல வாய்ப்புகள் நமக்கு தெரிகிறது.
உண்மையில் இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் தடை செய்யப்பட்ட பின்பும் நாட்டின் கருப்பு பணம் முழுமையாக ஒழியவில்லை.
2,000 ரூபாய் நோட்டு..
இதேவேளையில் ஏற்கனவே சந்தையில் போதுமான அளவிற்கு பண இருப்பு இருக்கும் வேளையில் ரிசர்வ் வங்கியின் இந்த 200 ரூபாய் நோட்டு புதிய கேள்வியை எழுப்பியுள்ளது.
தற்போது சந்தையில் 2,000 ரூபாய் நோட்டு மிகவும் குறைந்த அளவில் மட்டுமே புழக்கத்தில் இருக்கும் வேளையில் இதனை முழுமையாக நீங்கிவிட்டு அதற்கு இணையாக 200 ரூபாய் நோட்டை வெளியிடவும் செய்யலாம்.
சரியான முடிவு..
பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட போது பல கருப்பு பண முதலைகளிடம் 2000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக சிக்கிக்கொண்ட நிலையில், கருப்பு பணத்தை நாட்டில் இருந்து முழுமையாக களைய இந்த புதிய 200 ரூபாய் நோட்டை மத்திய அரசு திரும்ப பெறலாம்.
ஒப்புதல்
மத்திய அரசும், ரிசர்வ் வங்கியின் நிர்வாக அமைப்புகளின் ஒப்புதலுக்கு பின்னரே ஆர்பிஐ அச்சடிக்கும் பணிகளை துவங்கியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications