மாத சம்பளக்காரர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு என்றால் ஒவ்வொரு வருடமும் அவர்களுக்கு அளிக்கப்படும் சம்பள உயர்வு. பொதுவாக பதவி உயர்வை விடவும் சம்பள உயர்வுக்குதான நம்ம ஊரில் மவுசு அதிகம், ஐடி துறையை தவிர பெரும்பாலான துறைகளில் பதவிக்கு ஏற்ற சம்பளம் என்ற ஒன்று இல்லை. இதுவே இந்த மவுசுக்கு காரணம்.
இப்படி இருக்கும் போது 9 வருடமாக சம்பள உயர்வே இல்லையென்றால் ஒருவருக்கு எப்படி இருக்கும். யார் இவர்..?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
நாட்டின் முன்னணி வர்த்தக குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு தான் கடந்த 9 வருடங்களாக எவ்விதமான சம்பள உயர்வும் இல்லாமல் தினமும் உழைத்து வருகிறார்.
நீங்கள் கேட்கலாம்.. ஏப்பா அவருடைய நிறுவனம் தானே அப்புறம் எதுக்கு சம்பளம் என்று.. இவர் வாங்கி வருவது சந்தையின் சாராசரி அளவுகளை விடவும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் உயர் அதிகாரிகளின் மரியாதையும், மதிப்பும் அடங்கியுள்ளது.
15 கோடி ரூபாய்
கடந்த 9 வருடங்களாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி வருடத்திற்கும் வெறும் 15 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக வங்கி வருகிறார்.
இதுதவிர நிறுவனங்களில் அளிக்கப்படும் பங்கும் அளிப்பு, போனஸ், கமிஷன் என எதையும் வாங்குவதில்லை முகேஷ் அம்பானி.
வேண்டாம்...
கடந்த வருடமே முகேஷ் அம்பானிக்கு வருடத்திற்கு 25 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்திற்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம் ஒப்புதல் அளித்தது, அதேபோல் இந்த வருடம் நிறுவனம் அதிக லாபம், புதிய வர்த்தகம் என பல வழிகளில் வளர்ந்துள்ள காரணத்தால் இவருக்கு 38.75 கோடி ரூபாய் சம்பளம் பரிந்துரை செய்யப்பட்டது.
ஆனால் முகேஷ் அம்பானி இதற்கு கூறிய பதில் 'வேண்டாம்'..
2009
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக குழுவில் அக்டோபர் 2009ஆம் ஆண்டு சிஇஓவிற்கு அதிகப்படியாக சம்பளம் அளிக்கப்படுகிறது என்ற கேள்வி எழுந்தது.
இதன் காரணமாக 2009ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை முகேஷ் அம்பானி வெறும் 15 கோடி ரூபாய் சம்பளம் மட்டுமே போதும் என கூறி தனது முடிவில் சுமார் 9 வருடமாக உறுதியுடன் இருக்கிறார்.
பிற அதிகாரிகள்
மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உயர்மட்ட நிர்வாக குழுவில் முகேஷே் அம்பானியுடன் பணியாற்றும் அதிகாரிகளுக்கு ஒவ்வொரு வருடமும் சம்பள உயர்வு மட்டும் அல்லாமல், பங்குகளுக்கும் அளிக்கப்படுகிறது.
பெரிய மனசு..
இப்போ சொல்லுங்க முகேஷ் அம்பானி எப்படி..?
உங்கள் கருத்தை கருத்து பதிவிடும் இடத்தில் பதிவிடவும்.
ஜிஎஸ்டி படுத்தும் பாடு
இந்திய நிறுவனம்
ஜூலை 1


Click it and Unblock the Notifications