உபர் உங்களுக்கு டாக்ஸி சேவையுடன் சாப்பாடும் போடும்..!

உபர் நிறுவனம் உலகம் முழுவதிலும் செயலி மூலமாக டாக்ஸி சேவைக்குப் பேர் போன நிறுவனமாகும், இப்போது ஊபர் ஈட்ஸ் என்ற சேவையின் மூலமாக டெல்லியின் புற நகரப்பகுதியான குருகிராமில் செயலி மூலமாக உணவை டெலிவரி செய்யும் சேவையையும் வழங்க முடிவு செய்துள்ளது.

இதற்காக உபர் நிறுவனம் 300 உணவகங்களுடன் ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுள்ளது. அந்த உணவகங்கள் பட்டியலில் சாயோஸ், பிரியாணி பை கிலோ மற்றும் பிடாபிட் ஆகியவை உள்ளன.

மும்பையில் உபர் ஈட்ஸ்

மும்பையில் உபர் ஈட்ஸ்

உபர் ஈட்ஸ் நிறுவனம் மும்பையில் 2017 மே 2-ம் தேதி முதன் முதலாக உணவு டெலிவரி செய்யும் சேவையினைத் துவங்கியது. மேலும் இப்போது மும்பை நகரம் முழூவதிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

உபர் ஈட்ஸ் சேவை உலகம் முழுவதிலும் 6 கண்டங்களில் 45,000 ரெஸ்டாரண்ட்களுடன் இதற்காக ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது. வாடிக்கையாளர்களைப் பொருத்த வரை அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை அளிக்க விரும்புகின்றோம் என்றும் உலகம் முழுவதிலும் சேவை விரிவு படுத்தும் நோக்கத்தில் இந்தியாவிலும் சேவையை விரிவுபடுத்தி வருகின்றோம் என்று நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செயலி

செயலி

உபர் டாக்ஸி செயலி மற்றும் உபர் ஈட்ஸ் செயலி இரண்டும் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என்றும் ஐடியூன்ஸ் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் என இரண்டிலும் செயலி கிடைக்கும் என்றும் உபர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உபர் ஈட்ஸ் செயலி

உபர் ஈட்ஸ் செயலி

உபர் ஈட்ஸ் செயலி மெஷின் லர்னிங் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளதால் உங்கள் டையட் பொருத்த உணவுகளையும் தேர்வு செய்து ஆர்டர் செய்யலாம்.

உணவுகளைத் தேர்வு செய்தல்

உணவுகளைத் தேர்வு செய்தல்

வாடிக்கையாளர்களும் தங்களுக்குத் தேவையான உணவுகளைத் தேர்வு செய்யலாம், உணவகங்களைத் தேர்வு செய்து உண்ணலாம். அதுமட்டும் இல்லாமல் நாம் தேர்வு செய்யும் உணவை எந்த உணவகத்தில் குறைந்த விலையில் கிடைக்கின்றது என்றும் அறிந்து ஆர்டர் செய்யலாம்.

ஆர்டர் மதிப்பு

ஆர்டர் மதிப்பு

குறைந்தபட்ச ஆர்டர் மதிப்பு என்று ஏதும் இல்லை ஆனால் பேடிஎம் மூலம் கட்டணத்தைச் செலுத்தலாம்.

டெலிவரி செய்யப்படும் நேரம்

டெலிவரி செய்யப்படும் நேரம்

உணவு 35 நிமிடத்தில் உங்கள் வீட்டைத் தேடி வந்து டெலிவரி செய்யப்படும்.

வாடிக்கையாளர் சேவை

வாடிக்கையாளர் சேவை

24 மணி நேர வாடிக்கையாளர் சேவை மையமும், உணவை டிராக் சேவையும் அளிக்கப்படும்.

உபர் ஈட்ஸ் சேவை உள்ள நாடுகள்

உபர் ஈட்ஸ் சேவை உள்ள நாடுகள்

உலகளவில் உபர் நிறுவனம் 27 நாடுகளில் 97 நகரங்களில் உணவு டெலிவரி அளிக்கும் சேவையை அளிக்கின்றது. இதில் இந்த நகரங்களும் அடங்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+