எல் அண்ட் டி நிறுவனத்தின் புதிய சீஇஓ எஸ்என் சுப்பிரமணியன்..!
நாட்டின் முன்னணி பலதுறை நிறுவனங்களில் ஒன்றான லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனத்தின் தலைவராகச் சுமார் 17 வருடம் பணியாற்றிய ஏ.எம் நாயக் அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது.

இதன் மூலம் இந்நிறுவனத்தின் புதிய சீஇஓ மற்றும் நிர்வாக இயக்குனராகத் தற்போது எஸ்என் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த முடிவை எல் அண்ட் டி நிர்வாகம் ஏப்ரல் 7ஆம் தேதி முடிவு செய்தது. ஏ.எம் நாயக் இந்நிறுவனத்தில் சுமார் 52 வருடம் பணியாற்றியுள்ளார், இதில் 17 வருடம் இந்நிறுவனத்தின் சீஇஓவாகப் பணியாற்றினார்.

தற்போது எஸ்என் சுப்பிரமணியன் இந்நிறுவனத்தின் துணை மேலாளர் இயக்குநராகவும் மற்றும் தலைவராகவும் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications