தபால் துறை இன்று வெளியிட்ட அறிவிப்பில் ஆதார் கார்டு விவரங்களைத் திருத்த வேண்டும் என்றால் தபால் அலுவலகங்களிலும் செய்யலாம்.
இதன் முதற்கட்டமாக ஜூலை 3 முதல் சென்னையில் உள்ள 10 தபால் அலுவலகங்களில் இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விரைவில் தமிழகம் முழுவதும் 2,515 தபால் நிலையங்களிலும் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் மற்றும் தபால் துறையும் இணைந்து அளிக்கப் போவதாகவும் ஆதார் விவரங்களை எளிதாகப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
தற்போது பொது மக்கள் சென்னை தலைமை தபால் அலுவலகம், அண்ணா சாலை, தி நகர் தலைமை தபால் அலுவலகம், மயிலாப்பூர், செயின்ட் தாமஸ் மவுண்ட், தேனாம்பேட்டை, அண்ணா நகர், அசோக் நகர், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களுக்குச் சென்று இந்தச் சேவையைப் பயன்படுத்தி ஆதார் விவரங்களைத் திருத்தம் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications