7வது சம்பள கமிஷன் வீட்டு வாடகைப்படியான எச்ஆர்ஏ ஜூலை 1 முதல் அளிக்கப்படும் என்று சென்ற வாரம் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சகம் சென்ற வாரம் அறிவித்து இருந்தது.
இது 48 லட்சத்திற்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களின் ஒரு வருட கனவாக இருந்தது என்றும் கூறலாம்.
ஜாக்பாட்
இந்த மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்கள் 106 சதவீதம் முதல் 157 சதவீதம் வரை சம்பள உயர்வு பெறலாம் என்று தனியார் செய்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் இந்த ஜாக்பாட்டிற்கு ஜூன் 28ம் தேதி 7வது சம்பள கமிஷனின் கீழ் 34 கொடுப்பனுவுகள் திருத்தத்துடன் 48 லட்சத்திற்கு அதிகமாக ஊழியர்களுக்கு அளிக்க இருப்பதாக மத்திய அமைச்சகம் அறிவித்தது.
கூடுதல் செலவு
இதனால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 30,748 கோடி ரூபாய் கூடுதல் செலவாக இருக்கும் என்றும் 2017 ஜூலை 1 முதல் இந்தக் கொடுப்பனுவுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
வீட்டு வாடைகப்படி எவ்வளவு
7வது சம்பள கமிஷனின் வீட்டு வாடகைப்படி குறித்து அருண் ஜேட்லி கூறும் போது சம்பள கமிஷனின் குழு பரிந்துரைப் படி ஊழியர்களின் நகரங்களைப் பொருத்து 24, 16, 8 சதவீதமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
குறைந்த அளவு சம்பளம்
குறைந்த அளவு சம்பளம் வாங்குபவர்களுக்கு இந்த வீட்டு வாடகைப்படி கட்டுப்படி ஆகாது என்ற காரணத்தினால் குறைந்தபட்சம் 18,000 ரூபாய் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு 5,400 ரூபாய், 3,600 ரூபாய் மற்றும் 1,800 ரூபாய்க்கும் குறைவாக அளிக்கப்பட மாட்டாது என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் இவர்களுக்கு 30, 20 மற்றும் 10 சதவீதம் வரை வீட்டு வாடகைப்படி அளிக்கப்படும். இ-த பிரிவில் மட்டும் 7.5 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
5 லட்சம் ரூபாய் சம்பளம்
இதனால் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாகச் சம்பளம் வாங்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 30, 20 மற்றும் 10 சதவீதமாக வீட்டு வாடகைப்படி கிடைக்கும்.
எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது
மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களுக்குப் பேட்டியளித்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது, ஏப்ரல் 27 ம் தேதி நிதி அமைச்சருக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இருந்த 7 வது சம்பள கமிஷன் குழு பரிந்துரைகள், மற்றும் செயலாளர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டுக் கொடுப்பனுவுகள் அளிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications