ஒரு நிறுவனத்தில் வர்த்தகம் எப்படி இருந்தாலும், ஊழியர்கள் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் நிறுவனங்கள் இன்றைய உலகில் மிகவும் குறைவு.
ஆனால் அதிக வருவாய், உலகளாவிய வர்த்தகம் பெறும் பல முன்னணி நிறுவனங்களில் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகையுடனும், சேவைகளுடனும் பார்த்துக்கொள்கின்றனர். இத்தகைய நிறுவனங்களே ஊழியர்கள் வேலை செய்ய சிறந்த இடமாக கருத்தப்படுகிறது.
இந்த விஷயத்தில் இந்திய நிறுவனத்தால் அமெரிக்க நிறுவனங்களுடன் போட்டி போட முடிவில்லை என்பது தான் சோகம்.
ஆய்வு
இந்நிலையில் இந்தியாவில் ஊழியர்கள் வேலை செய்ய சிறந்த நிறுவனங்களை ஒவ்வொறு வருடமும் Great place to work என்ற அமைப்பு ஒவ்வொரு நாட்டிலும் ஆய்வு செய்து வருகிறது.
இந்தியா
இந்த வருடம் Great place to work அமைப்பு, இந்திய சந்தையில் நிலவும் வர்த்தக சூழ்நிலையை அடிப்படையாக கொண்டு ஒரு நிறுவனம் எப்படி தனது ஊழியர்களை மகிழ்ச்சியுடனும், புத்துணர்வு உடனும் வைத்துக்கொள்கிறது என்ற கண்ணோட்டத்தில் ஆய்வு செய்தது.
அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கம்...
இந்த ஆய்வு இந்தியாவில் இருக்கும் நிறுவனங்கள் மத்தியில் செய்யப்பட்டலும், எப்போது அமெரிக்க சந்தையை சேர்ந்த நிறுவனங்கள் இப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.
இந்தியாவை மையமாக கொண்டு இயங்க கூடிய நிறுவனங்கள் இந்த பட்டியலில் இடம் கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. அந்த வகையில் இந்த வருடமும் அமெரிக்க நிறுவனத்திற்கு தான் இப்பட்டியில் முதல் இடம் கிடைத்துள்ளது.
முதல் இடம்..
கடந்த வருடம் 10வது இடத்தில் இருந்து இன்டியூட் நிறுவனம், 2017ஆம் ஆண்டுக்கான பட்டியலில் கூகிள், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஆகிய முன்னணி நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது.
இதனை தொடர்ந்து இப்படியலில் இடம்பெறும் அடுத்தடுத்த நிறுவனங்களை இப்போது பார்போம்.
#2வது இடம்
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்
#3வது இடம்
கூகிள்
#4வது இடம்
லெமன் ட்ரீ ஹோட்டல்ஸ்
#5வது இடம்
எஸ்ஏபி லேப்ஸ்
#6வது இடம்
அடோப் சிஸ்டம்ஸ்
#7வது இடம்
நெட்ஆப்
#8வது இடம்
டெலிபர்பார்மென்ஸ்
#9வது இடம்
பிட்நீ பவ்ஸ்
#10வது இடம்
டிஎச்எல் எக்ஸ்பிரஸ்
ஆய்வு
Great place to work அமைப்பு இந்தியாவில் இந்த ஆய்வை எக்னாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிக்கையுடன் இணைந்து நடத்தியுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகளை இந்த அமைப்பு அறிக்கையாக வெளியிட்டு உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications