2017 ஜூலை 1 முதல் ஆதார் கார்டு பான் கார்டு இணைப்புக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது என்று வருமான வரிச் சட்டம் கூறுகின்றது. அதே நேரம் மத்திய அரசு சில தனிநபர்களுக்கு இரண்டு ஆவணங்களையும் இணைப்பதில் இருந்து சில நிபந்தனைகளின் கீழ் விலக்கு அளிக்கப்படுகின்றது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் கீழ் பிரிவு 139AA வருவதற்கு முன்பு இருந்தே மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் 2017 மே 11 அன்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்ட பிரிவினை சார்ந்த தனிநபர்களுக்கு ஆதார், பான் இணைப்பில் இருந்து வருமான வரிச் சட்டம் பிரிவு 139AA-ன் கீழ் விலக்கு அளித்துள்ளது.
யாருக்கெல்லாம் விலக்கு
மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் வருமான வரிச் சட்டம் பிரிவு 139AA-ன் கீழ் யாருக்கு எல்லாம் ஆதார், பான் இணைப்பில் இருந்து விலக்கு அளித்துள்ளது என்ற பட்டியலை இங்குப் பார்ப்போம்.
பட்டியல்
1. என்ஆர்ஐ
2. இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள்
3. 80 வயது அல்லது அதற்கு அதிக வயது உள்ளவர்கள்
4. அசாம், மேகாலயா மற்றும் ஜம்மு & காஷ்மிர் மாநிலத்தவர்கள்
வருமான வரிச் சட்டம் 139AA என்றால் என்ன?
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ள வருமான வரிச் சட்டம் 139AA-ன் கீழ் 2017 ஜூலை 1-ம் தேதி வரை யாரெல்லாம் பான் கார்டு பெற்றுள்ளார்களோ அவர்கள் எல்லாம் ஆதார் கார்டுன் பான் கார்டினை இணைக்க வேண்டும்.
பான் ஆதார் இணைப்பு செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?
பான் கார்டு ஆதார் கார்டு இணைப்பினை வருமான வரிச் சட்டம் 139AA-ன் கீழ் செய்யவில்லை என்றால் வருமான வரித் துறை பின்னர் அறிவிக்க இருக்கும் தேதியில் இருந்து உங்கள் பான் கார்டு செயல்படாது.
ஆதார் சட்டம் 2016 என்றால் என்ன?
ஆதார் (நிதி மற்றும் பிற மானியங்கள், நன்மைகள் மற்றும் சேவைகள்) சட்டம், 2016 இன் கீழ் இந்தியர்கள் ஒவ்வொருவரும் தங்களது பையோமெட்ரிக் தகவல்கள் மற்றும் தேவையான அடையாள, முகவரி சான்றிதழ்களைச் சமர்ப்பித்து ஆதார் கார்டு பெற வேண்டும். இந்தச் சட்டம் ஆதார் கார்டுகளைப் பெறுவதற்குச் சில தகுதிகளையும் அறிவித்துள்ளது.
வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றாலும் இணைப்புக் கட்டாயம்?
மத்திய நேரடி வரி ஆணையம் உச்ச நீதிமன்ற தீர்ப்புக் குறித்த சந்தேகங்களைத் தீர்க்கப் பத்திரிக்கையாளர்கள் சந்தித்த போது பான் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளவர்கள் வருமான வரி துறைக்குத் தங்களது விவரங்களைத் தெரியப்படுத்த வேண்டும். அதற்கு இணைப்புக் கட்டாயம். இது தனிநபர் ஒருவர் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றாலும் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
தீர்ப்பில் வந்த நன்மை
மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் கூறுவதைப் பார்க்கும் போது ஆதார் கார்டு இல்லாதவர்களுக்குச் சிக்கல் இல்லை என்படு தெரிய வந்துள்ளது, அவர்களது பான் கார்டு செயல்படாமல் போக வப்பில்லையா என்பதை வருமான வரிச் சட்டம் இன்னும் தெளிவாக விளக்கவில்லை, எனவே இதன் மீதான சிக்கல் மேலும் தொடர வாய்ப்பும் உள்ளது.
ஜூலை1
நிமிடங்களில் ஆதார் உடன் பான்
எப்படி திருத்துவது தெரியுமா..?
மத்திய அரசின் அடுத்த அதிரடி
தபால் மூலமாகவும் இணைக்கலாம்..!
வங்கி கணக்குடன் ஆதார்
ஆதார் கார்டு செயல்படாமல் போகும்
கீதா கோபிநாத்
கடுப்பான ஏர்டெல், ஐடியா
திடீர் முடிவு
ரகசிய டீல்
ராஜ வாழ்க்கை வாழும் மோடி..!
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications