ஒய்வூதிய அமைப்பான ஈபிஎப்ஓ அமைப்புப் பிராவிடென்ட் தொகையைப் பெறவும், ஓய்வூதிய தொகையை ஓய்வூதியதாரருக்கு செலுத்தவும் 5 வங்கிகளுடன் கூட்டணி அமைந்துள்ளது.
இதன் பிடி ஈபிஎப்ஓ அமைப்பு பாங்க் ஆஃ பரோடா, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் கோட்டாக் மஹிந்திரா வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
சேமிப்பு
இப்புதிய ஒப்பந்தத்தின் மூலம் வங்கிகளின் உதவிகளின் வாயிலாக ஈபிஎப்ஓ அமைப்பு தனது உறுப்பினர்களுக்குப் பணத்தை அனுப்புவதையும் தாண்டி முதலீட்டுகளைக் கவனித்துக்கொள்ளவும் உதவி செய்ய உள்ளது. இதன் மூலம் வருடத்திற்கு இந்த அமைப்பு சுமார் 125 கோடி ரூபாய் சேமிக்க உள்ளது.
நிறுவனங்கள்
மேலும் நிறுவனங்கள் இந்த 5 வங்கிகளில் கணக்கு வைத்திருந்தால், இவ்வங்கிகளின் வாயிலாக ஊழியர்களின் பிஎப் கணக்கில் நேரடியாகப் பணத்தை வைப்புச் செய்யலாம். அதுவும் இணைய வங்கி வாயிலாகவே செய்து விடலாம் என ஈபிஎப்ஓ அமைப்பு தெரிவித்துள்ளது.
செலவு
இதற்கு முன் ஈபிஎப்ஓ அக்ரிகேட்டர் வாயிலாகப் பணத்தை அனுப்பி வந்தது, அதற்கு ஒரு பரிவர்த்தனைக்கு 12 ரூபாய் என வருடத்திற்குப் பரிமாற்ற கட்டணமாகவே சுமாக் 350 கோடி ரூபாயை செலவு செய்தது.
செலவுகள் பாதியாகக் குறைந்தது
இதன் பின் ஈபிஎப்ஓ அமைப்பு பஞ்சாப் நேஷ்னல் வங்கி, அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கி, யூனியன் வங்கி ஆகியவற்றுடன் கூட்டணி வைத்து இணைய வங்கி வாயிலாகப் பரிமாற்றம் செய்யப்பட்டதன் மூலம் செலவின் அளவு 175 கோடி ரூபாயாகக் குறைந்தது.
புதிதாக 7 வங்கிகள்
தற்போது செய்யப்பட்ட கூடுதல் 5 வங்கிகள் மூலம் இதன் அளவு 50 கோடி ரூபாயாகக் குறையும் என ஈபிஎப்ஓ அமைப்பு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஈபிஎப்ஓ சேவை சிறப்பாக இருக்க மேலும் 7 வங்கிகளுடன் கூட்டணி அமைக்கத் தற்போது பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications