ஜியோ-வின் அடுத்த அதிரடி திட்டத்துடன் முகேஷ் அம்பானி..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் புதிய டெலிகாம் நிறுவனமான ஜியோ, அறிமுகம் மற்றும் அதன் மலிவான ஆஃபர்கள் மூலம் ஒட்டுமொத்த டெலிகாம் துறையைத் தலைகீழாகப் புரட்டிபோட்டுச் சந்தையில் இருக்கும் அனைத்து நிறுவனங்களையும் ரத்த கண்ணீர் வடிக்கவிட்டது.

இந்நிலையில் இம்மாத இறுதியில் முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனம் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய டெலிகாம் சந்தையைக் கட்டி ஆள போகிறார் முகேஷ் அம்பானி.

500 ரூபாய்க்கு 4ஜி

ரிலையன்ஸ் ஜியோ ஜூலை மாத இறுதிக்குள் 500 ரூபாய்க்கு 4ஜி VoLTE போனை அறிமுகம் செய்ய உள்ளது. இதனைச் சந்தைப்படுத்ததலுக்கும், சந்தை ஆய்வுக்கு ஜியோ எச்எஸ்பிசி வங்கியை நியமித்த நிலையில் ஜியோவின் இப்புதிய போனுக்கு 500 ரூபாய் என்ற விலையை நிர்ணயம் செய்துள்ளது.

வாடிக்கையாளர் மாற்றம்..

ஜியோவின் 500 ரூபாய் 4ஜி போன் அறிமுகத்தால் இந்தியாவில் இருக்கும் அதிகளவிலான 2ஜி வாடிக்கையாளர்கள் 3ஜிக்குள் நுழையாமல் நேரடியாக 4ஜிக்கு தாவ முடியும். இது ஜியோவின் சேவைக்கு மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தையும் பலத்தையும் அளிக்க முடியும்.

வெற்றி

ஏற்கனவே ஜியோ இந்தியாவில் மிகவும் மலிவான கட்டணத்தில் சேவையை அளிக்கும் நிலையில் தற்போது அறிமுகம் செய்யப்பட உள்ள 500 ரூபாய் மதிப்பிலான 4ஜி போன் ஒட்டுமொத்த டெலிகாம் சந்தையே புரட்டிபோடும்.

முதலில் கட்டண குறைப்பு நிறுவனங்களைப் புரட்டிப்போட்ட நிலையில், தற்போது 500 ரூபாய் 4ஜி போன்கள் வாடிக்கையாளர்களையும் புரட்டி போடும் என இத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

 

ஏன் இந்தத் திடீர் அறிமுகம்..

மிகவும் குறைந்த காலத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த ஜியோ கடந்த சில மாதங்களாகப் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் சந்தையில் 4ஜி மொபைல் போன்களின் அதீத விலையும், இப்பிரிவில் இருக்கும் குறைவான வாடிக்கையாளர்கள் தான் என ஜியோ கண்டறிந்தது.

 

புதிய திட்டம்..

இதனை உணர்ந்த ஜியோ, புகழின் உச்சியில் இருக்கும் போதே தனது வர்த்தகத்தையும், எதிர்கால வருவாயும் அதிகரித்துக்கொள்ளத் திட்டமிட்டு பல்வேறு நிறுவனங்களுடன் ஆய்வு மற்றும் ஆலோசனை செய்து இப்புதிய திட்டத்தைத் தீட்டியுள்ளது.

தந்தையின் வழி..

மேலும் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம் திருபாய் அம்பானி கையில் இருந்த போது 500 ரூபாய் போனை அறிமுகம் செய்தி இந்திய டெலிகாம் சந்தை புரட்சிக்கு வித்திட்டார்.

இந்நிலையில் இதேபோன்ற திட்டத்தையே தற்போது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ கையில் எடுத்துள்ளது. இது கண்டிப்பாக வெற்றி அடையும் என அனைத்து தரப்பினரும் அறிமுகத்திற்கு முன்னரே தெரிவித்துள்ளனர்.

 

VoLTE சேவை

இந்தியாவில் ஜியோ மட்டுமே அதிநவீன 4ஜி VoLTE சேவையை இயக்கி வருகிறது. ஆனால் ஏர்டெல், வோடாபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இச்சேவையை இயக்கி வருகிறது.

கீப்பேட் போன்

ஜியோவின் இந்த 500 ரூபாய் போன் தற்போது இருக்கும் ஸ்மார்ட்போனாக இல்லாமல் கீப்பேட் உடன் அறிமுகம் செய்யப்படும், ஆனால் 4ஜி போனில் பயன்படுத்தும் அனைத்து சேவைகளும் இதில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சீன நிறுவனத்துடன் கூட்டணி

இப்புதிய திட்டத்திற்கான அறிமுகத்திற்கு ஜியோ சுமார் 2 கோடி போன்களை ஆர்டர் செய்துள்ளது, இதற்காக ஜியோ சீனாவின் Zhejiang Techain Electronics Technology Co., Shenzhen CHINO-E Communication Co, Crave மற்றும் மெகாபோன் ஆகிய நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துள்ளது.

ஜூலை 21

மேலும் ஜியோவின் இலவசங்கள் முடிந்த பின்பு ஜியோ புதிய திட்டத்தை அறிமுகம் செய்த நிலையில், சக டெலிகாம் நிறுவனங்களும் டிராய் அமைப்பும் மறுப்பு தெரிவித்த நிலையில், தன் தானா தண் என்ற 84 நாட்கள் கொண்டு சிறப்புச் சலுகையை ஏப்ரல் 11ஆம் தேதி அறிவித்தார்.

இந்நிலையில் இந்த ஆஃபர் அடுத்தச் சில நாட்களில் முடிவடையும் காரணத்தால் ஜூலை 21ஆம் தேதி புதிய கட்டணம் மற்றும் திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ அறிவிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

1000 ரூபாய் போன்

சீனாவில் தயாரிக்கப்படும் இந்த போன் 1000 ரூபாய் மதிப்புடையதாக உள்ளது. இதற்கு ஜியோ 500 ரூபாய் மாணியமாக அளித்து ஜூலை 21ஆம் தேதி அறிவிக்கப்படும் திட்டத்துடன் இந்த போனை விற்பனை செய்ய உள்ளது.

இப்புதிய திட்டத்திலும் அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதிகள் இருக்கும் என்றும் உறுதியாகியுள்ளது.

மேலும் சிம், புதிய ஆஃபர் மற்றும் போன் உடன் சேர்த்து 500 ரூபாய் என்ற விலையை மட்டுமே ஜியோ நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ளது.

 

பதில்..

இதுக்குறித்த கேள்விகளுக்கு ஜியோ எவ்விதமான பதிலும் அளிக்கவில்லை, என்றாலும், எச்எஸ்பிசி ஜியோ இத்தகைய திட்டத்தை அறிமுகம் செய்ய அதிகளவில் வாய்ப்புகள் உள்ளது என்பதை தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து பல டெலிகாம் ஆய்வு நிறுவனங்களும் ஜியோவின் புதிய திட்டம் குறித்து சாதகமான பதில்களையே அறிவித்துள்ளது.

 

150 ரூபாய்க்கு புதிய ஆஃபர்

ஜியோவின் தன் தானா தண் ஆஃபர் அனைத்தும் 300 ரூபாய்க்கு அதிகமாக இருக்கும் காரணத்தால் புதிய வாடிக்கையாளர்களை பெறவும், குறைவாக செலவு செய்யும் வடிக்கையாளர்களை கவரவும் 150 ரூபாய்க்குள்ளான ஆஃபரை அறிமுகம் செய்ய ஜியோ திட்டமிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Reliance Jio may introduce 4G VoLTE handset with Rs500 price tag

Reliance Jio may intrduce 4G VoLTE handset with Rs500 price tag
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns