வங்கி இணையத்தில் அதிகத் தனி நபர்களைச் சேர்ப்பதற்காகவும் மற்றும் வங்கியின் நிதி சார்ந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும், நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கி சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்திய அரசாங்கம் பல்வேறுபட்ட வங்கிகளுக்கு ஒப்புதல் அளித்தது.
அது பண வழங்கீட்டு வங்கிகள் (Payments Banks) மற்றும் சிறு நிதி வங்கிகளுக்கு ( Small Finance Banks) கதவைத் திறந்த செயல்பாடாக அமைந்தது.
சிறு நிதி வங்கிகள்
தற்போது இதில் கேபிடல் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட், சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட், ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட், உட்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட், உஜ்வன் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் லிமிடெட், ஈஎஸ்ஏஎப் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட் மற்றும் ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட் என்ற பெயருடைய 8 சிறு நிதி வங்கிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தப் பிரிவின் கீழ் இயங்குவதற்கு 10 நிறுவனங்களுக்கு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அனுமதி அளித்துள்ளது.
சேவைகள்
இந்த வங்கிகள் நடப்புக் கணக்கு, சேமிப்பு வங்கிக் கணக்கு, வைப்பு நிதிகள், பாதுகாப்புப் பெட்டகங்கள் மற்றும் கடன்கள் ஆகிய சேவைகளை வழங்குகின்றது.
அதிக வட்டி
இவர்களிடம் வாங்கும் கடன்கள் விலை உயர்ந்தவை, இருந்தாலும் வைப்பு நிதிகள் கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் வருகின்றன. இந்த வங்கிகள் வணிக ரீதியான வங்கிகள் தருவதை விட அதிகமான வைப்புநிதி வட்டி விகிதத்தை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக: சூர்யோதய் ஸ்மால் பைனான்ஸ் லிமிடெட் 12 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரை கால வரையறைக் கொண்ட வைப்புத் தொகைகளுக்கு அதிகபட்சமாக 8.75% முதல் 9% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
புதிய வங்கியியல் வரம்பின் கீழ் யாரெல்லாம் பயனடைவார்கள்
சிறு நிதி வங்கிகளின் கீழ் சேர்க்கப்படாத அல்லது அதன் கீழ் சேவை வழங்கப்படாத வணிக வங்கிப் பிரிவுகளான சிறிய அல்லது நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், நுண் தொழில்கள் மற்றும் சிறு தொழில்கள், அமைப்புச் சாரா பிரிவைச் சேர்ந்த சிறு மற்றும் விளிம்பு நிலை விவசாயிகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவை இந்த முக்கிய வங்கிக் குழுக்களால் இலக்காகக் கொள்ளப்படுகின்றன.
ஒழுங்குமுறை விதிகள்
ஒழுங்குமுறை விதிகளின் படி, இரண்டு சிறு நிதி வங்கிகள் உஜ்வான் மற்றும் ஈக்விடாசையும் (Equitas) சேர்த்து அதன் நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஏயூ நிதி நிறுவனத்தார் இந்த ஜூனில் ஐபிஓ வெளியீட்டின் மூலம் பங்குச் சந்தையை அடைந்தது.
நவீன வங்கியாளர்களின் சவால்கள்
முன்னர் மைக்ரோ நிதி நிறுவனங்களாக இருந்து இப்பொழுது சிறு நிதி வங்கிகளாக இணைக்கப்பட்டிருக்கும் வங்கிகள் எதிர்கொள்ளும் முக்கியச் சவாலானது மிக அதிக அளவு வாராக் கடன்களாகும்.
அவர்களுக்குத் தொழிநுட்பம் சிறிதளவு உதவ முன் வந்திருக்கிறது. ஆயினும் கூட, வைப்புத் தொகைகளுக்கு முன்பாக வங்கிகள் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பெரும் நன்றியைச் செலுத்துகின்றன.


Click it and Unblock the Notifications