காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி அமெரிக்கா சென்ற போது பிரதமர் மோடி அவர்கள் அதிபர் டிரம்ப் அவர்களுடன் எச்-1பி விசா குறித்து ஏதுவும் பேசவில்லை என்றும் பேருக்கு இந்தியாவின் கீழ் உள்ள காஷ்மீரை அமெரிக்கப் பயன்படுத்த அனுமதி என்று கூறி சப்பைக் கட்டுக் கட்டுகின்றார், இவர் ஒரு பலவீனமான இந்திய பிரதமர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மோடி அவர்களின் அமெரிக்கப் பயணத்தைக் காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பக்கத்திலும் இது புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காகச் சென்ற பயணம் என்றும் முக்கியப் பிரச்சனைகள் குறித்த எந்த முடிவுகளும் எடுக்கவில்லை என்று விமர்சித்துள்ளது.
டிவிட்
ராகுல் காந்தி செய்த டிவிட்டில் ‘மோடி-டிரம் பேச்சுவார்த்தையில் எச்-1பி விசா குறித்த விவரங்கள் ஏதும் இல்லை' என்றும் ‘இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் அமெரிக்காவிற்கு அனுமதி' என்ற இரண்டு ஊடகங்களின் தலைப்பு செய்தியை மட்டும் வெளியிட்டுள்ளார்.
மேலும் அதில் நரேந்திர மோடி ஒரு பலவீனமான இந்திய பிரதமர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியர்களுக்கு முக்கியத்துவம் இல்லை
மோடியின் இந்தப் பயணத்தின் மூலம் அமெரிக்காவிற்குத் தான் அதிகப் பயன் என்றும் புகைப்படம் எடுத்துக்கொள்ளத் தான் மோடி அமெரிக்கச் சென்றுள்ளார் என்றும் காங்கிரஸ் கட்சி நேற்று டிவிட் செய்துள்ளது.
அந்த டிவிட்டில் இந்தியர்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
எச்-1பி விசா
எச்-1பி விசா குறித்தும், டெக் நிறுவனங்களின் நிலை குறித்தும் முக்கிய முடிவுகளை எடுத்து இருக்க வேண்டும் என்றும் ஒரு டிவிட் இருந்தது.
டிவி ஷோ
காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித்தொடர்பாளர் அஜய் மாக்கென் சென்ற 3 வருடங்களில் மோடி 64 வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டுள்ளதாகவும் அது அனைத்தும் இந்தியர்களுக்கான டிவி ஷோவாகத் தான் உள்ளது, நாட்டுக்கு எந்தப் பயணம் இல்லை என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கோரிக்கை
டிரம்ப் உடனான மோடியின் டந்திப்பில் எச்-1பி விசா மற்றும், இந்திய-பாக் எல்லையில் நடைபெறும் தீவிரவாதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் வலியுறுத்தி இருந்தது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications