சமையல் எரிவாயு மானியத்தைத் திருப்பி அளிக்கும் திட்டம் வெற்றி அடைந்ததை அடுத்து ரயில் டிக்கெட் மானியத்தினை திருப்பி அளிக்குமாறு மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.
இது வரை மத்திய ரயில்வே நட்டத்தில் இயங்கி வந்தாலும் டிக்கெட் கட்டணத்தில் மானியம் அளித்து வந்துள்ளது. அதனால் தான் பேருந்து கட்டணங்களை விட ரயில் டிக்கெட் கட்டணங்கள் அதிகமாக இருந்துள்ளது.
எப்போது முதல் அமலுக்கு வருகின்றது?
ரயில்வே டிக்கெட் மானியம் திருப்பி அளிக்கும் முறை அடுத்த மாதம் முதல் அமலுக்குக் கொண்டு வரை முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு அடுக்குகள்
மானியத்தினை திருப்பி அளிக்கும் முறையினை 50 சதவீதம் மற்றும் 100 சதவீதம் என இரண்டு அடுக்காகத் திருப்பி அளிக்கும் விதமாக ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது.
நட்டத்தில் இயங்கும் ரயில்வே
தற்போது வரை பொதுத் துறை போக்குவரத்து நிறுவனமான ரயில் சேவை 30,000 கோடி ரூபாய் நட்டத்தில் இயங்கி வந்தாலும் பயணிகளுக்கு மானிய விலையினில் டிக்கெட் அளிக்கப்பட்டுள்ளது.
மானியத்தைத் திருப்பி அளிப்பது எப்படி?
இணையதளம் மூலம் புக் செய்யப்படும் டிக்கெட் மற்றும் கவுண்டர்களில் பெறப்படும் டிக்கெட் என இரண்டு முறையிலும் மானியத்தினை திருப்பி அளித்து சீட்டினை பெறலாம்.
மானியம் மூலம் டிக்கெட் பெறுவது பயணிகளுக்குத் தெரிய வேண்டும் என்பதால் டிக்கெட்களில் இனி 43 சதவீதம் வரை தான் பயணிகளிடம் கட்டணமாக பெறப்படுவதாகவும், மீதம் உள்ள 57 சதவீதம் மானியம் முறையில் அரசு அளிப்பதாகவும் அச்சிடப்பட்டு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எந்தெந்த ரயில் டிக்கெட்களுக்கு மானியத்தைத் திருப்பி அளிக்க முடியும்?
அனைத்து ரயில்களிலும் 3ம் வகுப்பு ஏசி, 2ம் வகுப்பு ஏசி, சதாப்த்தி, ராஜ்தானி, பிரீமியம் ரயில்கள் போன்றவற்றின் டிக்கெட் கட்டணத்தின் மானியத்தைத் திருப்பி அளிக்க இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உதாரணம்
சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்ல 979 ரூபாய் டிக்கெட் கட்டணம் என்றால் 2,100 வரை டிக்கெட் கட்டணம் செலுத்த வேண்டி வரும். டெல்லியில் இருந்து மும்பை செல்ல 3 அடுக்கு ஏசி டிக்கெட் கட்டணம் 1,570 ரூபாயாக உள்ளது, மானியத்தைத் திருப்பி அளித்தால் 2,750 ரூபாய் டிக்கெட் கட்டணம் செலுத்த வேண்டும். இதுவே 2 அடுக்கு ஏசி டிக்கெட் 2,275 ரூபாயாக உள்ளது, இது 3,990 ரூபாயாக மானியம் இல்லாமல் டிக்கெட் பெறும் போது கட்டணமாக வசூலிக்கப்படும்.
பிற ரயில் டிக்கெட்கள்
பிற பெட்டிகள் மற்றும் ரயில்களிலும் விரைவில் மானியத்தை திரும்பப் பெறும் முறை அறிமுகப்படுத்தப் படும் என்றும் கூறப்படுகின்றது.
புறநகர் ரயில்கள்
புறநகர் ரயில்களில் பயணம் செய்பவர்கள் 36 சதவீதம் மட்டுமே பயண கட்டணமாகச் செலுத்துகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications