டெல்லி: 2015ஆம் ஆண்டு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் உரிமை மாற்றத்தில் ஏற்பட்ட பிரச்சனை அதன் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் கலாநிதி மாறன் மற்றும் கேஏல் ஏர்லையன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.
இதன் மூலம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் சுமார் 250 கோடி ரூபாயை கலாநிதி மாறன் மற்றும் கேஏல் ஏர்லையன்ஸ் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
நீதிமன்றன கணக்கு
மேலும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு அளிக்கப்பட வேண்டிய 250 கோடி ரூபாயை நீதிமன்ற கணக்கில் ஸ்பைஸ்ஜெட் செலுத்த வேண்டும் அதன் பின்னரே இத்தொகை லநிதி மாறன் மற்றும் கேஏல் ஏர்லையன்ஸ் நிறுவனத்திற்கு கொண்டு சேர்க்கப்படும்.
வங்கி உத்திரவாதம்
அதேபோல் நீதிபதி ரவிந்தரா பட் தலைமையிலான பென்ச் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 250 கோடி ரூபாயை செலுத்துவதற்கு முன்பு ஜூலை 31ஆம் தேதிக்குள் 329 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி உத்திரவாதத்தை அளிக்க வேண்டும் என தீர்பளித்துள்ளார்.
எதற்காக வழக்கு..
2015ஆம் ஆண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் இருந்து கலாநிதி மாறன் முழுமையாக வெளியேறி சிறு அளவிலான பங்குகளை மட்டுமே வைத்துக்கொண்டு மொத்த உரிமத்தையும் அதன் ஆஸ்தான நுறுவனரான அஜய் சிங் பெற்றார்.
இதில் தனக்கான பங்கு உரிமத்தை முறையாக செலுத்தாத காரணத்திற்காக கலாநிதி மாறன் மற்றும் கேஏல் ஏர்லையன்ஸ் நிறுவனம் வழக்கு தொடுத்தது.
தற்போது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முழுவதும் அஜய் சிங் கட்டுப்பாட்டில் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
வாய்ப்புகள்
இவ்வழக்கின் மீது கடந்த சில விவாதத்தில் பல்வேறு சாதகமான வாய்ப்புகளை நீதிமன்றம் அளித்தும், இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளவில்லை. கடைசியாக 250 கோடி ரூபாய் வைப்புக்கு இரு தரப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
பங்கு இருப்பு
இந்த வைப்பு மூலம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் கலாநிதி மாறனுக்கு சொந்தமாக இருக்கும் பங்கு இருப்பு குறைய போவதில்லை.
ரூ. 2 ஒரு பங்கு
ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் பங்குகளை 2015-ம் ஆண்டு அஜய் சிங்கிற்கு கலாநிதி மாறன் வெறும் 2 ரூபாய்க்கு ஒரு பங்கு என விற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பீனிக்ஸ் பறவை


Click it and Unblock the Notifications