உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வியாழக்கிழமை செயல் திறன் இல்லா அரசாங்க அதிகாரிகள் அல்லது துயரங்கள் கொண்டவர்களாக இருப்பின் கட்டாயமாக ஓய்வு பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஜூலை 31-ம் தேதிக்கு முன்பு 50 வயது உடைய அனைத்து மாநில அரசு ஊழியர்களின் செயல் திறன் குறித்தும் அறிக்கை வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசு
மத்திய அரசைப் பின்பற்றிச் செயல்பட்டு வரும் உத்திரபிரதேச அரசு அதிகாரத்துவத்தைச் சுத்தப்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றது. 2017-ம் ஆண்டு மே மாதத்தில் மத்திய அரசு 129 செயல் திறன் இல்லாத பிரிவு ஏ மற்றும் பிரிவு 1 நிலை அதிகாரிகளுக்கு ஓய்வு அளித்து அனுப்பியது. இதனை உத்திரபிரதேச முதல்வரும் அப்படியே தனது மாநிலத்தில் பின்பற்ற துவங்கியுள்ளார்.
ராஜிவ் குமார்
உத்தரபிரதேச மாநிலத்தின் புதிய தலைமைச் செயலர் ராஜீவ் குமார் கூறுகையில், எந்தக் காரணமும் இல்லாமல் செயல் திறன் குறைந்த அரசு ஊழியர்கள் விருப்ப ஓய்வு அளித்துவிட்டு மூன்று மாத கால அறிவிப்புக் காலத்தில் நடையைக் கட்டலாம் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் ஷிப்பிங் செயலாளர் பதவி வகித்து வந்த ராஜிவ் குமார் அன்மையில் உத்திரபிரதேச அரசின் கீழ் உள்ள பணிக்கு சென்று எடுத்த முதல் முக்கிய முடிவு இது என்றும் கூறப்படுகின்றது.
அடிப்படை விதி 56
அடிப்படை விதி 56-ன் கீழ் 50 வயதிற்கு மேல் உள்ள அரசு ஊழியர்களுக்குச் செயல் திறன் குறைபாடு இருந்தால் எந்தக் காரணமும் இல்லாமல் மூன்று மாத கால அவகாசத்துடன் கட்டாய ஓய்வு அளிக்க அதிகாரம் உள்ளதாகக் கூறப்படுகின்றது.
பட்டியல் தயார்
2017 மார்ச் 31 முதல் ஜூலை 31 வரை 50 வயதுக்கு அதிகமாக உள்ளவர்களின் செயல்திறன் குறித்த ஆய்வை உத்திரபிரதேச அரசு ஊழியர்களுக்கு நடத்தி பட்டியல் தயார் செய்யப்பட்டு வருவதாக ராஜிவ் தெரிவித்தார்.
அரசு ஊழியர்கள் பீதி
மோடி அரசின் இந்த முடிவு மத்திய அரசு ஊழியர்களை ஏற்கனவே கழக்கத்தில் ஆழ்த்தி வரும் நிலையில் உத்திரபிரதேச அரசும் இதனைப் பின்பற்ற முடிவு செய்துள்ளது. தமிழக அரசு என்ன செய்யும் என்று பொருத்து இருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications