இந்தியாவில் ரூ.50 கோடிக்கு போலி நாணயங்கள் அடித்த பலே ஆசாமிகள்..!

உப்கர் மற்றும் ஸ்வேக்கர் லூத்ரா ஆகியோர் போலி நாணய வட்டாரத்தில் முக்கிய நபர்களாக உள்ளனர். அவர்கள் பல முறை கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டனர் மற்றும் மீண்டும் கைது செய்யப்பட்டனர், இன்னும் அவர்கள் இந்தத் தொழிலை நிறுத்தியதாக இல்லை.

நேபாள எல்லையை உள்ளடக்கிய பல பிராந்தியங்களில், சிறப்பு வாய்ந்த செல் குழுக்கள் முகாம்கள் அமைத்து இவர்களைப் பிடித்துள்ளனர்.

சோதனை

சோதனை

லூத்ராவின் தொழிற்சாலையில் சோதனை நடத்திய போது 6 லட்சம் ரூபாய் மதிப்புடைய 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் போலி நாணயங்கள் சிக்கியது

 கொலை

கொலை

ரமேஷ் வர்மா என்பவருடன் கூட்டு சேர்ந்து உத்தம் நகரில் ஒரு தொழிற்சாலையினைத் துவங்கியுள்ளனர். வர்மா சில நாட்களில் லுத்ரா பிரதர்ஸ்க்கு குடைச்சல் அளிக்கக் கூலிக்கு ஆள் வைத்துக் கொலைசெய்துள்ளனர்.

இவர்கள் எப்படிச் செயல்பட்டார்கள்

இவர்கள் எப்படிச் செயல்பட்டார்கள்

போலி நாணயம் தயார் செய்ய ஹைட்ராலிக் இயந்திரம், அரைக்கும் இயந்திரம், லேத்து இயந்திரம் மற்றும் மேற்பரப்புச் சாணை எனப் பல இந்திரங்களை வாங்கி ஒரு வீட்டைத் தொழிற்சாலையாக மாற்றியுள்ளனர்.

மூலப்பொருள்

மூலப்பொருள்

மாயபுரி மற்றும் திலக் நகரில் இருந்து மெட்டல் ஷீட்கள் போன்ற மூலப்பொருட்களைப் பயன்படுத்திப் போலி நாணயங்களைத் தயார் செய்துள்ளனர்.

பயிற்சி

பயிற்சி

உப்கர் ஏற்கெனவே கள்ள நாணயங்களுக்கு டை பூசுவது எப்படி என்று கற்றுக் கொண்டார், மேலும் கும்பலில் மேலும் சிலருக்கு பயிற்சியும் அளித்துள்ளார்.

செய்யும் முறை

செய்யும் முறை

இரண்டு படிகளில் வெண்கல தாள்களிலிருந்து நாணயங்கள் சேகரிக்கப்பட்டன. முதலில் வெளிப்புற வளையம் தயாரிக்கப்பட்டுப் பிறகு மத்திய பகுதி அச்சிடப்பட்டது. மத்திய பகுதி நிக்கல் கோட்டிங் உடன் பளபளப்பாக இருக்கும். இரண்டு பகுதிகளும் ஒரு ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஒன்றாக வைத்து இணைக்கப்படுகின்றன. நாணயங்கள் ஒரு உண்மையான தோற்றத்தை கொடுக்கத் துரு துரு பிடிக்காமல் இருக்கப் பயன்படுத்தும் ஸ்ப்ரே ஒன்றைப் பயன்படுத்திப் போலி நாணயங்களை உருவாக்கியுள்ளனர்.

எவ்வளவு செலவு

எவ்வளவு செலவு

போலியாக ஒரு 10 ரூபாய் நாணயம் செய்ய 4.5 ரூபாயும், 5 ரூபாய் நாணயம் செய்ய 2 ரூபாயும் செலவாகியுள்ளது.

விநியோகம்

விநியோகம்

போலியாக உருவாக்கப்பட்ட நாணயங்களை வாரச் சந்தை, சிறு வணிகர்கள், நெடுஞ்சாலை டோல்கள் என டெல்லி, ராஜஸ்தான் மற்றும் ஹர்யானா உள்ளிட்ட மாநிலங்களில் புழக்கத்தில் விட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+