ரத்தன் டாடாவின் முக்கியத் திட்டமான குறைந்த விலையில் கார் தயாரித்து விற்கும் பிரிவில் இருந்து வெளியேறும் என்றும், இதற்கு முக்கியக் காரணமாக மக்களிடம் குறைந்து வரும் ஆர்வம் என்றும் கூறப்படுகின்றது.
உலகின் மிகவும் விலை குறைந்த கார தயாரிப்பிற்காக டாடா குழுமம் இனி முதலீடுகளைச் செய்யப் போவதில்லை, இந்தப் பிரிவில் பெரிதாக வளர்ச்சி ஏதும் இல்லை என்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மோசமான விற்பனை பிரிவில் இது உள்ளதாகவும் ஊடக வட்டாரங்கள் கூறுகின்றன.
ஏற்றுமதி
அதே நேரம் டாடா நிறுவனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மட்டும் நேனே கார்களைத் தயாரிக்கும் என்று நிறுவன தரப்புக் கூறுகின்றது.
விபத்துச் சோதனை
இந்தியாவில் தொடர்ந்து நேனே கார்களைத் தயாரித்து விற்க வேண்டும் என்றால் 2019-ம் ஆண்டு முதல் விபத்துச் சோதனை கட்டாயமாகச் செய்ய வெண்டும் என்றும் அதற்குக் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டும், ஆனால் அதற்கு டாடா குழுமம் தயாராக இல்லை.
பிஎஸ் VI விதிகள்
மேலும் டாடா குழுமம் 2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் நேனோ கார்களை விற்பனை செய்யப் பிஎஸ் VI இஞ்சின் உற்பத்தி செய்ய எல்லாம் முதலீடு செய்ய வேண்டும் என்பதால் இந்த முடிவை டாடா குழுமம் எடுத்துள்ளது என்றும் கூறலாம்.
வருங்காலத் திட்டம்
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தைப் பொருத்த வரை வருங்காலத்தில் சாதாரணக் கார்களை மட்டும் தான் உற்பத்தி செய்யும் என்று அதன் வருங்காலத் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அதே நேரம் டாடா நேனோ காரினை எங்குத் தேவை உள்ளதோ அந்த நாடுகளுக்கு மட்டும் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யும் திட்டத்தை டாடா வைத்துள்ளது.
விற்பனை
சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது நேனே கார் விற்பனை 58 சதவீதம் வரை சரிந்து 355 கார்கள் மட்டுமே மே மாதம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் வெற்பனையிலும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை.
செலவு
நேனோ கார் தயாரிப்பிற்காக அதிகச் செலவுகள் செய்ய வேண்டி இருப்பதால் குறைந்த விலை கார் தயாரிப்பை தவிர்த்து விட்டு பிற பிரிவுகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. மும்பையைச் சேர்ந்த விளம்பரதாரர் நிறுவனம் நேனோ கார்களுக்காக இனி டாடா எந்த முதலீட்டையும் செய்யாது என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications