நாளை காலை ராஜினாமா செய்து விடுங்கள்.. டெக் மகேந்திரா நிறுவனத்தில் ஊழியர்களுக்கு புது சிக்கல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா டெக் மஹிந்த்ரா ஊழியர்களின் பணி நீக்கத்திற்கு மன்னிப்புக் கேட்டுள்ளார்.

நாளை காலை ராஜினாமா செய்துவிடுங்கள் என்று நிறுவனத்தின் மனிதவள நிர்வாகி ஒருவர் ஊழியரிடம் பேசும் ஆடியோ கிளிப் வைரலாக இணையத்தில் பரவி வருவதை அடுத்து டெக் மகேந்திராவின் முக்கிய அதிகாரிகளும் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

19 பில்லியன் டாலர் மதிப்பிலான குழுமத்தின் தலைவரான ஆனந்த் மகேந்திரா தனிநபர் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இந்தச் சம்பவத்திற்காகத் தான் மன்னிப்பு கேட்பதாகவும் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

வருத்தம் தெரிவித்த நாயர்
 

வருத்தம் தெரிவித்த நாயர்

ஒரு ஊழியர் மற்றும் ஒரு நிறுவன அலுவலகப் பிரதிநிதிக்கும் இடையே நடக்கும் ஒரு உரையாடல் சம்பந்தமான சம்பவத்தை நாங்கள் அறிந்திருக்கிறோம். இந்த விவாதம் நடந்தது குறித்து நாங்கள் மிகவும் வருந்துகிறோம், இது எதிர்காலத்தில் மீண்டும் நடக்காது என்பதை உறுதி செய்யத் தேவையான திருத்தமான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம் என டெக் மகேந்திரா குழுமத்தின் தலைவர் நய்யார் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரச் சூழல்

பொருளாதாரச் சூழல்

தற்போதைய உலகளாவிய பொருளாதாரச் சூழலில் வணிக மாற்றங்களைச் சந்திப்பதற்கும் வாடிக்கையாளர்களின் "மூலோபாய முன்னுரிமைகள்" மற்றும் "தேவைகள்" ஆகியவற்றுடன் பணிபுரியும் பணியிடங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் நிறுவனம் தொடர்ந்து உத்திகளை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இடையூறு

இடையூறு

எவ்வாறாயினும், எமது நிறுவனத்தின் எழுச்சி தத்துவத்திற்கும் எமது குழுமத்தின் முக்கிய மதிப்பிற்கும் இடையூறாக இது இருக்கும் என நய்யார் கூறினார். டெக் மஹிந்திரா தலைமை நிர்வாக அதிகாரி சி.பி. கெர்னானி இந்தக் குறிப்பை ட்வீட் செய்தார்.

மீண்டும் நடக்காது என்பதற்கு உறுதி
 

மீண்டும் நடக்காது என்பதற்கு உறுதி

இதேபோன்ற உணர்வை எதிரொலிக்கும் வகையில், கெர்னானி ட்வீட் செய்துள்ளார்: மனிதவள நிர்வாகி மற்றும் ஊழியர் இடையிலான கலந்துரையாடல் பற்றி நான் மிகவும் வருந்திக்கிறேன். எதிர்காலத்தில் அது மீண்டும் நடக்காது என்பதை உறுதி செய்யச் சரியான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

வருவாய்

வருவாய்

இந்திய டெக் நிறுவனங்களின் வருவாயினைப் பொருத்தவரை டெக் மஹிந்திரா வருவாய் ஐந்தாவது இடத்தில் உள்ளது. டிசம்பர் 2016 இறுதிவரை எடுக்கப்பட்ட கணக்கில் நிறுவனம் 1.17 லட்சம் ஊழியர்களைக் கொண்டுள்ளது.

வியாபார சூழலில் சவால்கள்

வியாபார சூழலில் சவால்கள்

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்க, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் வியாபார சூழலில் சவால்கள் மற்றும் கடுமையான சிக்கல்களை எதிர்கொள்ளும் நேரத்தில் ஆடியோ கிளிப்பை பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பணிநீக்கங்கள் பற்றிய அறிவிப்புகள்

பணிநீக்கங்கள் பற்றிய அறிவிப்புகள்

தொழிற்துறை தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தாலும் கூட, டெக் மஹிந்த்ரா உட்படப் பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து பணிநீக்கங்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

பணிநீக்கங்கள்

பணிநீக்கங்கள்

நிறுவனங்கள் வழக்கமான வணிக முடிவுகளின் ஒரு பகுதியாகப் பணிநீக்கங்களை அறிவித்திருக்கின்றன, ஆனால் பலர் கட்டுப்பாட்டுச் செலவினங்களை நோக்கி மேலும் இயங்குவதாக நம்புகின்றனர்.

காக்னிசெண்ட்

காக்னிசெண்ட்

அமெரிக்கைவை சேர்ந்த காக்னிசெண்ட் மூத்த அதிகாரிகளை 9 மாதம் சம்பளம் வாங்கிக் கொண்டு நடையைக் கட்டுங்கள் என்று அன்மையில் அறிவித்தது.

விப்ரோ

விப்ரோ

விப்ரோ நிறுவனத்தின் ஆண்டுச் செயல்திறன் மதிப்பிடுதல் கூட்டத்திற்குப் பிறகு 600 ஊழியர்களுக்குப் பணி நீக்கம் அளித்துள்ளது.

அதே நேரம் அமெரிக்காவில் இந்திய ஊழியர்களைப் பணிக்கு எடுப்பதில் உள்ள சிக்கலினை தீர்க்க அமெரிக்கர்களைப் பணிக்கு எடுக்கும் முடிவை எடுத்துள்ளது.

இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ் நிறுவனமும் 10,000 ஊழியர்களை அமெரிக்காவில் வரும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையே டிசிஎஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்களும் பின்பற்ற முடிவு எடுத்துள்ளன.

வேலைவாய்ப்பு அதிகரிப்பு

வேலைவாய்ப்பு அதிகரிப்பு

ஐடி நிறுவனங்கள் நாட்டில் மிகப்பெரிய வேலை அளிக்கும் பணிகளைச் செய்து வந்துள்ளன. கடுமையான விசா ஆட்சியின் தாக்கத்தோடு மட்டுமல்லாமல், நடைமுறைகளை அதிகரிப்பது, வரும் ஆண்டுகளில் பணியமர்த்தல் குறைப்புக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tech Mahindra Bosses Apologise Over Manner Of Techie's Firing

Tech Mahindra Bosses Apologise Over Manner Of Techie's Firing
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more