சேவை கட்டணம் வசூலித்தால் நீதிமன்றத்துக்கு செல்லலாம்.. உணவகங்களுக்கு அடுத்த சிக்கல்..!

நுகர்வோர் விவகாரத் துறை உணவகங்களில், ரெஸ்டாரண்ட்டுகளில் உணவை வழங்கும் போது சேவைக் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதமானது என்று தெரிவித்துள்ளது.

மேலும் உணவகங்கள் பில் அளிக்கும் போது அதில் சேவை கட்டணங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தால் நுகர்வோர்களை நீதிமன்றத்துக்குச் செல்லுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

வழிகாட்டுதல்

வழிகாட்டுதல்

ஏப்ரல் மாதம் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களில் உணவுப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் போது அதற்குச் சேவை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் அது நுகர்வோரின் விருப்பத்துக்கு உறியது என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

சேவைக் கட்டணம் என்பது டிப்ஸ்

சேவைக் கட்டணம் என்பது டிப்ஸ்

நுகர்வோர் விவகாரத் துறையின் செயலாளர் அவினாஷ் கே ஸ்ரீவஸ்தவா இது குறித்துச் செய்தியாளர்களிடம் கூறுகையில் சேவை கட்டணம் என்பது டிப்ஸ் போன்றது, இதை அளிக்க வேண்டுமா, இல்லையா என்பதை நுகர்வோர் தான் முடிவு செய்ய வேண்டும் உணவகங்களின் உரிமையாளர்கள் என்று தெரிவித்தார்.

நுகர்வோர் நீதிமன்றம்

நுகர்வோர் நீதிமன்றம்

இது குறித்த வழிமுறைகளை நுகர்வோர் விவகாரத் துறை ஏப்ரல் மாதமே வெளியிட்டுள்ளதாகவும் இதனை உணவகங்களில் மீறினால் நுகர்வோர் நீதிமன்றத்திற்குச் செல்லவும் என்று கூறினார். நுகர்வோர்கள் எங்களை நாடியும் வரலாம், வழிகாட்டுதல்களை மீறுபவர்கள் மீது எப்படிச் செயல்பட்டு நடவடிக்கை என்பதற்கு வழிகாட்டியாக இருப்போம் என்றும் அவர் கூறினார்.

உரிமை உண்டு

உரிமை உண்டு

சேவைக் கட்டணம் என்பது சட்ட விரோதமானது, கட்டாயப்படுத்திச் சேவை கட்டணம் வசூலிக்கக் கூடாது. வாடிக்கையாளர்களுக்குச் சேவை கட்டணத்தை அளிக்க மாட்டேன் என்பதற்கு உரிமை உண்டு. உணவகங்களுக்குச் சேவை கட்டணம் அளிக்க உரிமை இல்லை அதே நேரம் வாடிக்கையாளர்கள் நினைத்தால் டேவை கட்டணத்தை அளிக்கலாம்.

விருப்பம் இருந்தால் அளிக்கலாம்

விருப்பம் இருந்தால் அளிக்கலாம்

சேவைக் கட்டணத்திற்காக ரசீதில் காலியாக இடம் அளிக்கலாம் என்றும் அதில் வாடிக்கையாளர்களுக்கு விருப்பம் இருந்தால் எவ்வளவு செலுத்த விரும்புகின்றார்கள் என்று குறிப்பிட்டுச் செலுத்தலாம். இந்த விதி முறைகள் எல்லாம் ஏப்ரல் 23 அன்றே வெளியிடப்பட்டுள்ளது என்று ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

இரண்டு மாதங்கள்

இரண்டு மாதங்கள்

விதிமுறைகள் வெளிவந்தும் இரண்டு மாதங்கள் ஆன பிறகும் இன்னும் பல உணவக நிர்வாகங்கள் சேவை கட்டணத்தைத் தொடர்ந்து வசூலித்து வருகின்றன.

சட்ட விரோதம் இல்லை

சட்ட விரோதம் இல்லை

தேசிய உணவகங்களின் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் சேவை கட்டணம் வசூலிப்பது ஒன்றும் சட்ட விரோதம் இல்லை என்றும் அவை வழிகாட்டுதல்கள் சட்டங்கள் இல்லை என்றும் கூறியுள்ளது.

வழிகாட்டுதல்கள் ஒன்றும் சட்டம் இல்லை

வழிகாட்டுதல்கள் ஒன்றும் சட்டம் இல்லை

தேசிய உணவகங்களின் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரகுல் குமார் வெளியிட்ட அறிக்கையில் வழிகாட்டுதல்கள் ஒன்றும் சட்டம் இல்லை, பொதுமக்கள் இடையில் நுகர்வோர் துறை தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகின்றது, உணவகங்களின் பணிகளை இது பெரிதும் பாதிக்கின்றது.

சட்டத்தின் விதிமுறைகளை மீறுவதில்லை

சட்டத்தின் விதிமுறைகளை மீறுவதில்லை

உணவகங்களினால் சேவை கட்டணம் வசூலிக்கப்படுவதால் சட்டப்பூர்வமாகச் சட்டத்தின் விதிமுறைகளை மீறுவதில்லை என்று மீண்டும் மீண்டும் இது வலியுறுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

உணவகங்கள் ஏற்கனவே ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததை அடுத்து ஏற்பட்ட வரி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+