நாட்டின் முன்னணி ஆன்லைன் பில் பேமென்ட் மற்றும் வேலெட் சேவை அளிக்கும் நிறுவனமான பேடிஎம், தனது தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் ஈகாமர்ஸ் வர்த்தகத்திற்காகப் புதிதாகப் பேடிஎம் மால் என்ற கிளை நிறுவனத்தைத் துவங்கியுள்ளது.
இப்புதிய நிறுவனத்தை உடனடியாகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைய வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பேடிஎம் நிர்வாகம் திடீர் முடிவை எடுத்துள்ளது.
800 ஊழியர்கள்
புதிதாகத் துவங்கப்பட்டுள்ள பேடிஎம் மால் நிறுவனத்தின் வர்த்தகத்தை உடனடியாக வளர்க்க வேண்மெனில் அதனை முழுமையாகப் புரிந்துகொண்ட, நிறுவனத்தின் வழக்கத்தை நன்கு தெரிந்த ஊழியர்களாலே செய்ய முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு.
பேடிஎம் நிறுவனத்தில் இருந்து சுமார் 800 ஊழியர்களைப் பேடிஎம் மால் நிறுவன பணிகளுக்கு மாற்றியுள்ளது இதன் நிர்வாகம்.
காலத் தாமதம்..
இதன் மூலம் புதிய பணியாளர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் காலம் முழுமையாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பணி மாற்றப்பட்டுள்ள ஊழியர்கள் அனைவரும் ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2,000 ஊழியர்கள்
மேலும் இந்த ஈகாமர்ஸ் வர்த்தகத்திற்காக மட்டும் பேடிஎம் நிறுவனம் இன்னும் 2,000 ஊழியர்களைப் பணியில் அமர்த்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் டெக்னாலஜி சந்தையில் புதிய வேலைவாய்ப்புகள் அதிகளவில் உருவாக வாய்ப்புகள் அதிகம்.
சுனில் கோயல்
2015ஆம் ஆண்டு நியர்.இன் நிறுவனத்தைப் பேடிஎம் கைப்பற்றிய பின் இதன் நிறுவனரான சுனில் கோயல் இந்நிறுவனத்திலேயே இணைந்தார்.
தற்போது பேடிஎம் மால் பிரிவின் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தை இவர் கவனித்துக்கொள்ள உள்ளார்.
அலிபாபா.காம்
கடந்த வருடம் அலிபாபா.காம் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பூஷன் பாடில் பேடிஎம் நிறுவனத்தில் இணைந்தார், இவர் பேடிஎம் மால் நிறுவனத்தின் லாஜிஸ்டிக்ஸ் பணிகளைப் பெங்களுரூ அலுவலகத்தில் இருந்து கவனிக்க உள்ளார்.
மார்கெட்டிக் மற்றும் வாடிக்கையாளர் சேவை
பேடிஎம் மால் நிறுவனம் ஈகாமர்ஸ் சந்தையில் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனத்துடன் போட்டியாகக் களமிறங்கும் நிலையில் இந்நிறுவனத்தின் மார்கெட்டிக் பிரிவை சுவ்ரப் வஷிஷ்தா மற்றும் வாடிக்கையாளர் சேவை அமித் பகாரியா ஆகியோர் துணை தலைவர் பதவியுடன் பணிகளைச் செய்ய உள்ளனர்.
அதிரடி ஆஃபர்
சீனாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்திய சந்தையில் குதித்தாலும், முறையாகத் தற்போது தான் பேடிஎம் நிறுவனத்துடன் தனிப்பட்ட முறையில் ஈகாமர்ஸ் வர்த்தகத்தில் குதிக்கிறது.
மேலும் இதன் அறிமுகத்திற்காக முதல் வாடிக்கையாளர்களை ஈர்க்க பேடிஎம் மால் தளம் பல அதிரடி சலுகையை அளிக்க முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications