பேடிஎம் தனது புதிய நிறுவனமான பேடிஎம் மால் வாயிலாக ஈகாமர்ஸ் சந்தையில் குதித்துள்ளது. வழக்கம் போல் இந்த நிறுவனத்திலும் தள்ளுபடி, ஆஃபர் என அறிவித்து அனைத்துப் பிரிவுகளிலும் வாடிக்கையாளர்களைப் பிடித்தாலும், கிராசரி அதாவது பலசரக்குப் பரிவில் தொய்வை கண்டுள்ளது.
ஆரம்பக் கட்டத்திலேயே இந்த நிலையைச் சரி செய்ய நினைத்த பேடிஎம், அமேசான் நிறுவனத்திற்குப் போட்டியாகப் புதிய பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது.
பிக்பேஸ்கட்
ஆன்லைன் கிராசரி சந்தையில் யாரும் அடைய முடியாத இடத்தையும் மக்கள் மத்தியிலும் நம்பிக்கையும் பெற்ற பிக்பேஸ்க்ட் நிறுவனத்தை அமேசான் பிளிப்கார்ட் ஆகியவை வாங்கத் திட்டமிட்ட நிலையில், பிளிப்கார்ட் ஆரம்பகட்டத்திலேயே வெளியேறியது.
இதன் பின் அமேசான் இன்று வரை உறுதியாக இந்நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்ற திட்டமிட்டு வருகிறது. ஆனால் பிக்பேஸ்கட் நிறுவனமும் தொடர்ந்து மறுத்து வருகிறது.
பேடிஎம்
பிக்பேஸ்கட் நிறுவனத்துடன் அமேசான் முட்டி மோதிக்கொண்டு இருக்கும் நிலையில், ஸ்மார்டாகச் சிந்தித்துப் பேடிஎம் நிறுவனம் இந்நிறுவனத்தில் 200 மில்லியன் டாலர் மட்டும் முதலீடு செய்து சிறு அளவிலான பங்குகளைப் பெற பேச்சுவார்த்தை துவக்தியுள்ளது.
மார்ச் 2016
பிக்பேஸ்கட் மார்ச் 2016ஆம் ஆண்டு முதலீட்டை ஈர்க்கும்போது, இந்நிறுவனம் 450 மில்லியன் டாலராக இருந்தது. தற்போது இது 550 மில்லியான இருக்கும் எனச் சந்தை கணிப்புகள் கூறுகிறது.
சரியான வாய்ப்பு
தற்போதைய நிலையில், பிக்பேஸ்கட் நிறுவனம் முழுமையாக விற்பனை செய்ய மனமில்லை, இதனால் பேடிஎம் அளிக்கும் 200 மில்லியன் டாலர் ஆஃபரை பெற்றுக்கொண்டு தனது நிறுவனத்தையும், சேவையையும் விரிவாக்கம் செய்யலாம்.
கைமாறு..
இதனிடைய பேடிஎம் செய்யும் முதலீட்டுக்கு, பிக்பேஸ்கட் நிறுவனத்தின் சேவையைத் தனது பேடிஎம் மால் தளத்திலும் சேர்க்க வாய்ப்புகள் உண்டு. இதன் வாயிலாக இணைய உலகில் ஆன்லைன் மளிகை மற்றும் காய்கறி விற்பனையில் பேடிஎம் மிகப்பெரிய இடத்தைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications