சமுக வலைத்தளங்களில் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் கேன்சலேஷன் கட்டணங்கள் ஜூலை 1 முதல் உயரப்போவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதற்கு இந்தியன் ரயில்வேஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் விளக்கத்தையும் அளித்துள்ளது.
சமுக வலைத்தளங்கள், வாட்ஸ் ஆப் போன்ற சமுக வலைத்தளங்களில் பரவி வரும் அந்தச் செய்தி முற்றிலும் தவறானது என்றும் உன்மைக்குப் புறம்பானது என்றும் ரயில்வே நிர்வாகம் ஜூன் 30-ம் தேதி தெரிவித்தது. ஆனால் இது பயணிகள் இடையே நிறையக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், ரயில்வே மேலும் தட்கல் இட ஒதுக்கீடு மற்றும் ரத்து விதிகளை மீண்டும் வளியிட்டுள்ளது.
தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கான நேரம்
தட்கல் ரயில் டிக்கெட்களை புக் செய்வதற்கு 2015-ம் ஆண்டு முதன் முறையாக ஏசி டிக்கெட்களை காலை 10:00 மணி முதல் புக் செய்யலாம் என்றும் ஏசி இல்லாத டிக்கெட்களை தட்கல் வழியாகக் காலை 11:00 மணி முதல் புக் செய்யலாம் என்றும் அறிவித்தது.
தட்கள் என்றால் என்ன?
ரயில் பயணம் செய்ய விரும்புபவர்கள் அவசரக் காலங்களில் பயணம் செய்ய விரும்பும் போது ஒரு நாளைக்கு முன்பு புக் செய்வதற்கான சேவை ஆகும்.
டிக்கெட்டினை ரட்து/கேன்ஷலேஷன் செய்தால் என்ன ஆகும்?
தட்கள் சேவையினை பயன்படுத்தி புக் செய்து கன்ஃபார்ம் ஆன டிக்கெடினை ரத்து அல்லது கேன்ஷலேஷன் செய்ய விரும்பினால் கட்டணம் திருப்பி அளிக்கப்பட மாட்டாது.
எத்தனை டிக்கெட்கள் தட்கல் முறையில் புக் செய்ய முடியும்?
ஒரே நேரத்தில் 4 தட்கல் வரை ரயில்வே கவுண்டர்களில் புக் செய்யலாம். இதுவே ஐஆர்சிடிசி தளத்தில் ஒரு கணக்கை பயன்படுத்தி 2 டிக்கெட்கள் மட்டுமே செய்ய முடியும்.
தட்கல் டிக்கெட் புக் செய்யும் போது சாதாரண ரயில்டிக்கெட் புக்கிங் இல்லாமல் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
பிரீமியம் தட்கல் சேவை
2014 அக்டோபர் மாதம் முதல் அறிமுகம் செய்யப்பட்ட பிரீமியம் தட்கல் டிக்கெட் சேவையில் புக் செய்தால் டிக்கெட்டின் விலை நேரம் குறைய குறைய உயர்ந்துகொண்டே போகும். இது புக் செய்யப்பட்ட டிக்கெட்களை வைத்தும் மாறும்.
தட்கல் முன்பதிவுகளில் சலுகை இல்லை
ரயில்வே வலைத்தளத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவலின் படி இரண்டாம் வகுப்பு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய 10 சதவீதம் வரை கூடுதல் கட்டணமாகவும், பிற வகுப்பு டிக்கெட்களுக்கு 30 சதவீதமும் அடிப்படை கட்டணத்தில் இருந்து கூடுதலாக செலுத்த வேண்டும்.
பட்டியல்
பட்டியல்
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications