மத்திய அரசின் விமான போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர்இந்தியா தொடர்ந்து நஷ்டம் அடைந்து வருவதை காரணம் காட்டி உள்ளூர் விமான பயணிகளுக்கு அசைவ உணவு அளிப்பதை முழுமையாக நிறுத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
ஆனால் இது எக்னாமிக் கிளாஸ் பயணிகளுக்கு மட்டுமே, இதே விமானத்தில் ஃபஸ்ட் கிளாஸில் பயணம் செய்வோருக்கு அசைவ உணவு பயணிகள் விருப்ப படி அளிக்கப்படும் என தெரிவித்தது.
இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டது விஸ்தாரா
டாடா விஸ்தாரா
இது மக்கள் மத்தியில் பெரிய அளவிலான எதிர்ப்பை பெற்றது. ஏற்கனவே ஏர்இந்தியா நிறுவனத்தை மாறிமாறி கிழித்துக்கொண்டு இருக்கும் நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல டாடா குழுமத்தின் விமான சேவை நிறுவனமான விஸ்தாரா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உங்கள் சாய்ஸ்
மக்கள் மத்தியில் ஏர்இந்தியா அறிவித்த அறிவிப்பால் வெறுப்பு அதிகரித்துக்கொண்டு இருக்கும் நிலையில், விஸ்தாரா நிறுவனம் நாங்கள் உங்களுக்கு சாய்ஸ் தருகிறோம். நீங்கள் எதை வேண்டுமானாலும் சப்பிடலாம் என டிவிட்டரில் தெரிவித்துள்ளது.
டிவிட்
இதுக்குறித்து டாடா குழுமத்தின் விஸ்தாரா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தி இது.
ஏர் இந்தியா
இதில் வியப்பு என்வென்றால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அடித்தளமிட்டதே டாடா என்பது தான் வேடிக்கை.
விற்பனை
மேலும் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், இதனை வாங்க இண்டிகோ மிகவும் ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
பல ஆயிரம் கோடி கடனில் இருக்கும் இந்த நிறுவனத்தை வாங்க இண்டிகோ நிறுவனத்திற்கு தனி தில் வேண்டும்.
அனுபவம்
விஸ்தாராவின் கொச்சி - டெல்லி பயணம் செய்த ஒரு வாடிக்கையாளரின் கருத்தை பாகுங்கள்.
விஸ்தாரா குறைவான வழித்தடத்திலேயே சேவை அளித்தாலும், வாடிக்கையாளர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அமைதியான பயணம்
மற்றொரு பயணியின் அமைதியான பயணம்.


Click it and Unblock the Notifications