ஸ்னாப்டீல் நிறுவனத்தை வாங்க பிளிப்கார்டின் 6,000 கோடி டீல்..!

இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் கடந்த சில மாதங்களாகப் போட்டி நிறுவனமாக இருந்த ஸ்னாப்டீல் நிறுவனத்தை வாங்குவதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக முதலில் 800-850 மில்லியன் டாலர்கள் தோராயமாக 5,500 கோடி ரூபாய் கொடுக்குப் பிளிகார்ட் நிறுவனம் முன்வந்தது. ஆனால் அதனை ஏற்க ஸ்னாப்டீல் நிறுவனம் மறுத்து விட்டது.

6,150 கோடி ரூபாய்

6,150 கோடி ரூபாய்

இப்போது பிளிப்கார்ட் நிறுவனம் மீண்டும் 900-950 மில்லியன் டாலர்கள் தோராயமாக 6,150 கோடி ரூபாய் அளித்து ஸ்னாம்டீல் நிறுவனத்தை வாங்க முடிவு செய்துள்ளதாக நமக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 பில்லியன் டாலர்

1 பில்லியன் டாலர்

பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்தப் புதிய ஆஃபர் கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் ரூபாயினை நெருங்கி உள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தம் முடிந்து கையெழுத்து ஆகும் வரை பேச்சுவார்த்தை பற்றிய விவரங்களை இரண்டு நிறுவனங்களும் வெளியிடத் தாயாராக இல்லை.

இரண்டாவது ஆஃபர்

இரண்டாவது ஆஃபர்

பிளிப்கார்ட் நிறுவனத்த்ன் 900-950 மில்லியன் டாலர் டீல் ஆபர் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம் என்று தெரிகின்றது.

பதில் அளிக்க மறுத்த நிறுவனங்கள்

பதில் அளிக்க மறுத்த நிறுவனங்கள்

இது குறித்து ஸ்னாப்டீல், சாப்ட் பாங்க் மற்றும் பிளிகார்ட் நிறுவனங்களைத் தொடர்புகொண்டு கேட்டபோழுது பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.

முதல் ஆஃபரை தவிர்த்த ஸ்னாப்டீல்

முதல் ஆஃபரை தவிர்த்த ஸ்னாப்டீல்

பிளிப்கார்ட் நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ள 800-850 மில்லியன் டாலர் குறைவானது என்று ஸ்னாப்டீல் மறுத்துள்ளது.

 சாப்ட் பாங்க்

சாப்ட் பாங்க்

கடந்த சில மாதங்களாக ஸ்னாப்டீல் நிறுவனத்தின் ஆஸ்தான முதலீட்டாளர் நிறுவனமான சாப்ட் பாங்க் விற்பனைக்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.

பிரீசார்ஜ்

பிரீசார்ஜ்

மறுபக்கம் ஸ்னாப்டீல் நிறுவனம் தங்களது மொபைல் வாலெட் பிரிவான பிரீசார்ஜ் நிறுவனத்தை விற்கும் பணிகளையும் ஒருபக்கம் மேற்கொண்டு வருகின்றது. இந்த டீல் எல்லாம் அடுத்த வாரம் முடிந்துவிடும் என்றும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

இந்தியாவின் இ-காமர்ஸ் துறையின் முக்கிய நிகழ்வு

இந்தியாவின் இ-காமர்ஸ் துறையின் முக்கிய நிகழ்வு

பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் இடையிலான இந்த டீல் முடிந்தால் இந்தியாவின் இ-காமர்ஸ் துறையில் நடைபெற்ற மிகப் பெரிய கையகப்படுத்தல் என்ற பெயர் கிடைக்கும்.

வலுவான போட்டியில் தோல்வி

வலுவான போட்டியில் தோல்வி

இந்திய இ-காமர்ஸ் பிரிவில் முன்னணி போட்டியாளர்களில் ஒருவரான ஸ்னாப்டீல் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களிடம் இருந்து வந்த வலுவான போட்டியைச் சமாளிக்க முடியாமல் தோல்வியைக் கண்டுள்ளது.

சரிந்த மதிப்பு

சரிந்த மதிப்பு

ஸ்னாப்டீல் நிறுவனத்தின் மதிப்பீடும் 2016-ம் ஆண்டு இருந்த 6.5 பில்லியன் டாலரில் இருந்து மிகப் பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. சாப்ட்பாங்க் நிறுவனமும் தன்னுடைய முதலீட்டில் இருந்து 1 பில்லியன் டாலரினை திரும்பப்பெற்றுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+