பரிமாற்ற கட்டணங்கள் 75% திடீர் குறைப்பு.. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அதிரடி..!
பரிமாற்ற கட்டணங்கள் 75% திடீர் குறைப்பு.. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அதிரடி..!
நாட்டின் மிகப்பெரிய வணிக வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, மின்னணு பரிமாற்ற முறையான NEFT மற்றும் RTGS ஆகியவற்றுக்கு தான் இதுவரை விதித்து வந்த கட்டணத்தில் சுமார் 75 சதவீதம் வரை குறைத்துள்ளது.

இப்புதிய கட்டண குறைப்பு வருகிற 15ஆம் தேதி முதல் அமலாக்கத்திற்கு வருகிறது.
இத்தகைய பண பரிமாற்ற முறை பொதுவாக இணைய வங்கி மற்றும் மொபைல் பாங்கிங் சேவையில் மட்டுமே நடைபெறும். இதற்கான கட்டணத்தையே தற்போது எஸ்பிஐ வங்கி குறைத்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல் சிறு தொகை பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், 1000 ரூபாய்க்கு குறைவான பரிமாற்றத்திற்கு பரிமாற்ற கட்டணம் முழுமையாக நீக்கப்பட உள்ளதாக எஸ்பிஐ வங்கி புதன்கிழமை அறிவித்தது.


Click it and Unblock the Notifications