டெல்லி: நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ் 2017ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு லாபத்தில் சுமார் 10 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்திற்கே இத்தகைய நிலை எனில், இத்துறையில் இருக்கும் பிற நிறுவனங்களின் நிலை சற்றுக் கேள்விக் குறியாகவே உள்ளது.
லாபம்
சந்தைக் கணிப்புகளில் இந்நிறுவனம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 6,203 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடையும் என எதிர்பார்த்த நிலையில் 5,945 கோடி ரூபாய் மட்டுமே லாபமாகப் பெறும் முதலீட்டாளர்களை ஏமாற்றியது.
வருவாய்
இதேபோல் இந்நிறுவனத்தின் வருவாய் அளவுகளும் 0.2 சதவீதம் வரை சரிந்து 29,584 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
ரூபாய் மதிப்பு
இக்காலாண்டில் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வின் காரணமாகச் சுமார் 650 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியான வி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அடுத்தக் காலாண்டில் நம்பிக்கை
இக்காலாண்டில் சந்தையில் பல பிரச்சனைகள் இருந்தாலும், டிசிஎஸ் நிறுவனத்தில் அனைத்துத் துறைகளும் வளர்ச்சி அடைந்துள்ளது, இதனால் அடுத்த வரும் காலாண்டுகளில் நிறுவனத்தின் வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும் எனத் தெரிவித்தார் ராஜேஷ் கோபிநாத்.
வாடிக்கையாளர்கள்
2017ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனம் 1 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் சுமார் 8 வாடிக்கையாளர்களையும், 10 மில்லியன் டாலருக்கும் அதிக மதிப்பீட்டில் சுமார் 12 வாடிக்கையாளர்களையும் புதிதாகப் பெற்றுள்ளது.
ஈவுத்தொகை
மேலும் இந்நிறுவனப் பங்கு முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்குச் சுமார் 7 ரூபாயை ஈவுத்தொகையாகக் கொடுத்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications