இன்போசிஸ் நிறுவனத்தின் அடுத்த இலக்கு.. விஷால் சிக்காவின் காரசாரமான பேச்சு..!

2017ஆம் நிதியாண்டுக்கான முதல் காலாண்டு முடிவுகளில் டிசிஎஸ் நிறுவனத்தின் லாபம் சரிந்த நிலையில் இன்று முவுகளை வெளியிட்ட இன்போசிஸ் சந்தை கணிப்புகளை விடவும், மார்ச் காலாண்டை விடவும் 3.33 சதவீத அதிக லாபத்தை அடைந்துள்ளது.

காலாண்டு முடிவுகளை வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இந்நிறுவனத்தின் சிஇஓ விஷால் சிக்கா இதுவரை பேசிராத வகையில் கடுமையாகவும் காரசாரமாகவும் பேசினார்.

யார் சொன்னது..?!!

யார் சொன்னது..?!!

காலாண்டு முடிவுகளை அறிவிக்க வரும்போதும் விஷால் சிக்கா மற்றும் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பிராவின் ராவ் ஆகியோர் முழுக்க முழுக்க இன்போசிஸ் நிறுவனத்திற்குள்ளேயே தயாரிக்கப்பட்ட ஆள்ளில்லா காரில் வந்தனர்.

 

 

டிவிட்டர்

இதுக்குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் விஷால் சிக்கா கூறுகையில், யார் சொன்னது எங்களால் டிரான்ஸ்பார்மேடிவ் டெக்னாலஜியை உருவாக்க முடியாது என்று..? என்ற தனது போட்டி நிறுவனங்களும், இன்போசிஸ் நிறுவனத்தின் திறன் குறித்து விமர்சனம் செய்தவர்களுக்கு நேரடியாக சவால் விடும் வகையில் பதிவிட்டிருந்தார்.

அடுத்த டார்கெட்

அடுத்த டார்கெட்

ஆள்ளில்லா கார் தொழில்நுட்பம் தான் எங்களது அடுத்த இலக்கு. எண்கள் வாரியாக வேண்டுமெனில் அடுத்த சில வருடங்களில் இன்போசிஸ் நிறுவனத்தின் 10 சதவீத வருமானம் புதிய டெக்னாலஜிகளில் இருந்து கிடைக்கும்.

2 வருடத்திற்கு முன்பு இன்போசிஸ் நிறுவனத்தில் இது இல்லை. ஆனால் இதுவே தற்போது எங்களது டார்கெட் என்று விஷால் சிக்கா கூறினார்.

 

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

மேலும் இந்த கட்டிங் எட்ஜ் டெக்னாலஜி ஆள்ளில்லா கார் வரையில் மட்டும் நின்றுவிடாமல் விஆர் ஒன்றையும் உருவாக்கி வருகிறோம். இதை எங்களது முக்கிய வாடிக்கையாளரான டோயோட்டா மற்றும் போயிங் ஆகிய நிறுவனங்களை மையமாக வைத்து உருவாகி வருகிறோம் என சிக்கா தெரிவித்தார்.

கால்ப் கார்ட்

கால்ப் கார்ட்

இந்த ஆள்ளில்லா கால்ப் கார்ட் அடிப்படையாக கொண்டு இன்போசிஸ் சர்வதேச சந்தையில் வளர்ந்து வரும் அட்டானமஸ் மற்றும் கனெக்டட் வாகன பிரிவில் இன்போசிஸ் களமிறங்க உள்ளது.

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு

அதேபோல் 1000 திறன்வாய்ந்த இன்ஜினியர் ஊழியர்களை திரட்டி செயற்கை நுண்ணறிவு துறையில் புதிய திட்டங்களில் ஈடுபட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இன்போசிஸ் வெர்ஷன் 2.0

இன்போசிஸ் வெர்ஷன் 2.0

இதன் மூலம் இன்போசிஸ் இனி வெறும் சேவை துறையில் மட்டும் இயங்காமல் புதிய புதிய தொழில்நுட்பத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாக ஒரு சந்தையையும் வார்த்தகத்தை அடைய உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+