இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் அமெரிக்காவில் அடுத்தச் சில ஆண்டுகளில் 10,000 ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப் போவதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்குச் சமமாக இந்தியாவிலும் ஊழியர்களை வேலைக்கு எடுக்க இருப்பதாகத் தலைமை நிர்வாக அதிகாரி விஷால் சிக்கா நேற்று அறிவித்துள்ளார்.
பெங்களூரைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இன்ஃபோசிஸ் நிறுவனம் ஆஃப் கேம்ப்பஸ் முறையில் மட்டும் 19,000 ஊழியர்களைப் பணிக்கு எட்டுக்கு முடிவு செய்துள்ளது.
20,000 ஊழியர்கள் வரை பணிக்கு எடுக்கப்படுவார்கள்
அமெரிக்காவில் 10,000 ஊழியர்களைப் பணிக்கு எடுப்பதினால் இந்தியாவில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவது குறையாது என்றும் இரண்டு காலாண்டுகளில் 10,000 நபர்களைப் பணிக்கு எடுக்கப்படும் என்று விஷால் சிக்கா கூறியுள்ளார்.
சென்ற காலாண்டில் 1,000 நபர்கள் பணிக்கு எடுப்பு
2017 ஏப்ரல்- ஜூன் காலாண்டில் மட்டும் 1,000 நபர்கள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிக்குச் சேர்க்கப்பட்டுள்ளதாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முதன்மை இயக்கு அலுவலர் பிரவின் ராவ் தெரிவித்துள்ளார்.
பணி நீக்கத்தை அறிவித்த நிறுவனங்கள்
ஆச்சர்யமாக இன்ஃபோசிஸ் நிறுவனம் 36வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தின் போது 11,000 நபர்களை ஆட்டோமேஷன் நுழைவால் வெளியேற்ற இருப்பதாக அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
டெக் நிறுவனங்கள்
டெக் மகேந்திரா, விப்ரோ மற்றும் காக்னிசெண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிகளவில் ஊழியர்களை வெளியேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
ஐடி நிறுவனங்கள்
நிறுவனங்களும் இதனை உறுதி செய்யும் படி பெரிய அளவில் ஊழியர்கள் பணி நீக்கம் இருக்காது என்று கூறிவிட்டு அவர்கள் விருப்பு ஓய்வு அளித்துவிட்டு வெளியேறுமாறு அறிவித்தும், நிறுவனத்தின் வளர்ச்சிக்காக எடுக்கப்பட்ட முடிவும் என்றும் சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications