இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்ச்சியாளராக நியமிக்க பல முன்னணி விளையாட்டு வீரர்கள் போட்டிபோட்ட நிலையில், பிசிசிஐ அமைப்பு ரவி சாஸ்திரி-யை புதிய கோச் ஆக நியமித்தது.
இந்நிலையில் ரவி சாஸ்திரிக்கு அளிக்கப்பட்ட சம்பளம் தான் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
7 கோடி ரூபாய்
அனில் கும்ப்ளே இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பணியை ராஜினாமா செய்த நிலையில், பிசிசிஐ பல கட்ட ஆலோசனைக்கு பின் ரவி சாஸ்திரி இப்பணியில் நியமித்துள்ளது.
இந்நிலையில் இவருக்கு அளிக்கப்படும் சம்பளம் வருடத்திற்கு 7 முதல் 7.5 கோடி ரூபாய் வரையில் இருக்கும் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அனில் கும்ப்ளே
மே மாதத்தில் பிசிசிஐ பிரிசென்டேஷனில் அனில் கும்ப்ளே கேட்ட தொகையும் இதுவே. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த காரணத்தாலும், தனது சொந்த காரணத்தாலும் கும்ப்ளே பணியை ராஜினாமா செய்தார்.
பழைய சம்பளம்..
இதற்கு முன் ரவி சாஸ்திரி அணியின் டைரக்டர்-ஆக இருந்த போதும் இவருக்கு 7 முதல் 7.5 கோடி ரூபாய் வரையிலான சம்பளமே அளிக்கப்பட்டது. ஆனால் இதில் மீடியா சேனல்களில் கமன்டர் ஆக பணியாற்றியதிற்கு கொடுக்கப்பட்ட சம்பளம்.
பணி காலம்
ரவி சாஸ்திரியின் பணி காலம் 2019ஆம் ஆண்டு நடக்க இருக்கும் கிரிக்கெட் உலக கோப்பை வரை நீடிக்கும்.
முக்கிய அதிகாரிகள்
ரவி சாஸ்திரி உடன் பணியாற்றும் முக்கிய அதிகாரிகளான பேட்டிங், பீல்டிங் மற்றும் பவுலிங் கோச் ஆகியோருக்கான சம்பளம் 2 கோடி ரூபாய் என்ற அளவிற்கு அதிகமாக இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ராகுல் டிராவிட்
இந்நிலையில் இந்திய ஏ மற்றும் அன்டர் 19 அணிகளின் கோச் ஆக இருக்கும் ராகுல் டிராவிட்-இன் ஒப்பந்தம் 4.5 கோடி ரூபாய் மற்றும் 5 கோடி ரூபாய் மதிப்புடையது.
தற்போது இவர் இந்திய அணியின் ஓவர்சீஸ் பேட்டிங் கன்சல்டிங் ஆக நியமிக்கபட உள்ள நிலையில் டிராவிட்க்கு கூடுதல் சம்பளம் கிடைக்கும்.
ஜாகிர் கான்
மேலும் பவுலிங் கன்சல்டிங் ஆக நியமிக்கபட உள்ள ஜாகிர் கான், 4 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார்.
இதுக்குறித்து முடிவுகளை பிசிசிஐ இன்னும் வெளியிடவில்லை.
திடீர் தடை
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நியமனத்தை தவிர பிற இரு பயிற்சியாளர்கள் நியமனத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது நிர்வாகிகள் கமிட்டி (சிஓஏ). இந்த கமிட்டி சுப்ரீம் கோர்ட்டால், பிசிசிஐ செயல்பாடுகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவாகும்.
இந்திய கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியில் சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
More From GoodReturns

எல்பிஜி தட்டுப்பாட்டை சரி செய்ய அமெரிக்காவை நாடும் இந்தியா..!! நிலைமை எப்போது சீராகும்?

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!



Click it and Unblock the Notifications