உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகிள், கிளவுட் சேவை வர்த்தகத்தை அதிகரிக்கும் வகையில் இந்தியாவில் தனது ஊழியர்கள் எண்ணிக்கையை எப்போதுமில்லாத வகையில் இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் கிளவுட் சேவை வழங்குவதில் அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் ஆதிக்கம் செலுத்தி வரும் சூழ்நிலையை தகர்க்கும் வகையில் கூகிள் இந்த முடிவு செய்துள்ளது.
வியூகம்..
இந்தியாவை அடிப்படையாக கொண்டு கூகிள் தனது கிளவுட் சேவை ஆசியா முழுவதும் விரிவாக்கவும் திட்டமிட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கூகிள், அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மத்தியில் புதிய போட்டி உருவாகும்.
இந்தியா
கிளவுட் சேவையை இந்தியா இன்னும் முழுமையாக பயன்படுத்தாமல் இருக்கும் நிலையில், இந்த 3 நிறுவனங்களும் இந்தியா மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பாக நிலவுகிறது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் 2017ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் கிளவுட் சேவை வர்த்தகம் 38 சதவீதம் அதிகரித்து 1.81 பில்லியன் டாலராக உயர்ந்து உள்ளது. 2020ஆம் ஆண்டில் இதன் மதிப்பு 4.10 பில்லியன் டாலராக உயரும்.
மோஹித் பாண்டே
இந்தியாவில் அனைத்து துறைகளிலும், பிரிவுகளிலும் எங்களது கிளவுட் சேவையை கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக இந்த வருடம் எங்களது ஊழியர்கள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளோம் என கூகிள் கிளவுட் சேவையில் இந்திய தலைவர் மோஹித் பாண்டே தெரிவித்தார்.
30 பில்லியன் டாலர்
கிளவுட் சேவைக்கான உள்கட்டுமானத்தை உருவாக்க கடந்த 3 வருடத்தில் சுமார் 30 பில்லியன் டாலரை கூகிள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் இந்த வருடத்திற்குள் இந்தியாவின் முதல் கிளவுட் ரிஜியனை திறக்க உள்ளது கூகிள்.
17 கிளவுட் ரிஜியன்
இதுவரை கூகிள் நிறுவனம் உலகளவில் சுமார் 10 கிளவுட் ரிஜியன்களை வைத்துள்ளது. புதிதாக 7 அறிமுகம் செய்யப்படுவதில் இந்தியாவும் ஒன்று.
போட்டி..
இந்நிலையில் கூகிள் நிறுவனம் கிளவுட் சேவையில் தற்போது போட்டிபோடும் முக்கிய நிறுவனங்களான அமேசான், மைக்ரோசாப்ட், ஐபிஎம் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் கிளவுட் ரிஜியனை அமைத்துள்ளது.
வல்லுனர்கள்
இந்திய ஐடி நிறுவனங்கள் தற்போது இருக்கும் மோசமான சூழ்நிலையில், தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு கூகிள் நிறுவனத்தின் இரட்டிப்பு திட்டம் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications