இந்திய ரிசர்வ் வங்கி முதல் முறையாக ஜூன் 30 உடன் முடிந்த வாரத்திற்கான இருப்பு நிலை அறிக்கையை வெளியிடவில்லை. இது ரிசர்வ் வங்கியின் வருடாந்திர கணக்கு மூடும் நாள் என்பதால் பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட பாதிப்பை பிரதிபலிக்கும் இந்த அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிடாது சந்தையில் பல கேள்விகளை ஏழுப்பியுள்ளது.
மத்திய வங்கி இன்னும் பழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளின் மதிப்பைக் கணக்கிடும் பணிகளைச் செய்து வரும் காரணத்தால், ஜூன்30 உடன் முடிந்த வாரத்திற்கான அறிக்கையை வெளியிடவில்லை.

நாட்டில் புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளின் மதிப்பை இருப்பு நிலை அறிக்கையில் குறிப்பிடுவது, மிகவும் முக்கியமான பொறுப்பு. இதுகுறித்து முழுமையான தகவல்களை மக்கள் மத்தியில் சமர்ப்பிக்க வேண்டியது மத்திய வங்கியின் கடமையும் கூட.
இந்நிலையில் ரூபாய் நோட்டுகளின் மதிப்பீட்டுப் பணிகளை ஜூலை மாத இறுதிக்குள் முடித்துவிடும். எனவே ஆகஸ்ட் மாதத்தில் இருப்பு நிலை அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கும்.


Click it and Unblock the Notifications