வீட்டில் இருக்கும் பயன்படுத்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய இந்தியாவில் மிகவும் கஷ்டமாக இருந்த நிலையில், ஓஎல்எக்ஸ் நிறுவனம் இதற்காக பிரத்தியேக சேவை அறிமுகம் செய்தது.
வெளிநாடுகளில் இத்தகைய சேவை பல ஆண்டுகளாக இருக்கும் நிலையில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில மாதங்களிலேயே இந்த சேவை வெற்றிபெற்றது.
கிளிக்.இன்
இச்சந்தையில் இருக்கும் நிறுவனங்கள் பெரும்பாலானவை மொபைல் ஆப் அல்லது இணையதளம் என ஏதேனும் ஒன்றை மட்டுமே மையமாக வைத்து செயல்படும்.
ஆனால் கிளிக்.இன் இரண்டிலும் முழுமையான மற்றும் சிறப்பான சேவையை அளிக்கிறது. இந்த நிறுவனம் ரியல் எஸ்டேட்-இல் துவங்கி, எலக்ட்ரானிக்ஸ், மேட்ரிமோனி வரை பல பிரிவுகளில் சேவை அளிப்பது குறிப்பிடத்தக்கது.
ஓஎல்எக்ஸ் நிறுவனம்
இத்தகைய சேவையில் ஓஎல்எக்ஸ் நிறுவனம் இந்தியாவின் தலை சிறந்த நிறுவனமான இருக்கும் நிலையில், கடந்த சில ஆண்டுகளில் ஓஎல்எக்ஸ் உடன் போட்டி போட பல நிறுவனங்கள் சந்தையில் குவிந்துள்ளது.
இந்த நிறுவனங்கள் ஓஎல்எக்ஸ் போன்ற பெரிய அளவிலான வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் இதற்கு அதிகளவிலான வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் ஓஎல்எக்ஸ் நிறுவனத்திற்கு சந்தையில் போட்டியாக நிற்கும் 5 நிறுவனங்களையே நாம் இப்போது பார்க்கபோகிறோம்.
கேஷிபை (Cashify)
மொபைல் ஆப் மூலம் சேவை அளிக்கும் இந்த நிறுவனம் கேஜெட் விற்பனைக்காக மட்டும் பிரத்தியேகமாக இயங்கி வருகிறது.
பெரு நகரங்களில் மட்டுமே சேவை அளிக்கும் இந்த நிறுவனம் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றுள்ளது.
குவிக்கர்
பயன்படுத்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் சந்தையில் ஓஎல்எக்ஸ் நிறுவனத்திற்கு முக்கிய போட்டியாக விளங்குவது குவிக்கர்.
இந்த தளத்தில் நீங்கள் வாங்கவும், விற்கவும், வாடகைக்கு விடவும் முடியும்.
கவுட்லூட்
கேஜெட் பொருட்களுக்கு மட்டும் தனி சேவை அளிக்கும் கேஷிபை நிறுவனத்தை போல பேஷன் ஆதாவது அனைத்து விதமான ஆடைகள், காலணிகள், வாச்ட் என அனைத்தையும் விற்பனை செய்யும் சேவையை கவுட்லூட் (Coutloot) அளிக்கிறது.
இந்த தளத்தில், பன்னாட்டு பிராண்ட் ஆடைகளுக்கு பிரத்தியேக ஆஃபர் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஜாம்ரூ (Zamroo)
குவிக்கர் நிறுவனத்தை போல் அனைத்து விதமான பொருட்களை இங்கு விற்பனை செய்ய முடியும். இது வளர்ந்து வரும் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய போட்டியாக விளங்குகிறது.
ஈபே
உலகளவில் சேவை அளிக்கும் ஈபே, இந்தியாவிலும் அதன் சேவை அளிக்கிறது. இதன் மூலம் நீங்கள் வெளிநாடுகளிலும் பொருட்களை விற்பனை செய்யலாம்.


Click it and Unblock the Notifications