இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான சேவை நிறுவனமான இண்டிகோ தனது பிராந்திய விமான சேவை, ஆதாவது முக்கிய நகரங்களை தவிர 2ஆம் கட்ட நகரங்களை குறிவைத்து இண்டிகோ தனது சேவையை விரிவாக்கம் செய்ய உள்ளது.
இந்த சேவை வருகிற நவம்பர் மாதம் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் அல்லாமல் அடுத்த வருடம் இந்த சேவையை மிகப்பெரிய அளவில் வரிவாக்கம் செய்து ஒட்டுமொத்த இந்தியாவையும் விமான போக்குவரத்தில் இணைக்க திட்டமிட்டுள்ளது இண்டிகோ.
தென் இந்தியா
இந்நிலையில் இண்டிகோ இத்திட்டத்தின் முதற்கட்டமாக தென் இந்தியாவை மையமாக வைத்து துவக்க உள்ளது. இதற்கான காரணத்தையும் இண்டிகோ தெரிவித்துள்ளது.
காரணம்..
இயற்கையாகவே தென் இந்தியா விமான சேவைக்கு ஏற்ற ஒன்று, மேலும் இப்பகுதியில் சேவை அளித்து வந்த ஏர் கோஸ்டா, ஏர் கார்னிவெல், ஏர் பெகாசஸ் ஆகிய 3 நிறுவனங்களும் தங்களது சேவைகளை நிறுத்தி 18 மாதங்கள் ஆகியுள்ளது.
இந்த வர்த்தகத்திற்கு மிகவும் சாதகமான ஒன்றாகவும் உள்ளது, குறிப்பாக இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஏடிஆர் மற்றும் எம்பிரேர் விமானங்களை பயன்படுத்தி வந்தது.
50 விமானங்கள்
இப்புதிய திட்டத்திற்காக இண்டிகோ நிறுவனம் சுமார் 50 ஏடிஆர் 72-600 ரக விமானங்களை வாங்கியது. பொதுவாக இந்நிறுவனம் ஏர்பஸ் விமானத்தை மட்டுமே வாங்கியும், பயன்படுத்தியும் வந்த நிலையில், இந்த 50 விமானங்களின் ஆர்டர் முதலீட்டாளர்களை ஆச்சரியப்படுத்தியது.
உதான் திட்டம்..
இண்டிகோ நிறுவனம் இந்த புதிய சேவையை மத்திய அரசின் உதான் திட்டத்திற்கு கீழ் கொண்டு வர முடிவு செய்துள்ளது. ஆகையால் கட்டணங்கள் மிகவும் குறைவாக இருக்கும்.


Click it and Unblock the Notifications