ரிலையன்ஸ் ஜியோ-விற்கு போட்டியாக ஏர்டெல், ஐடியா, வோடபோன் நிறுவனங்கள் பல அதிரடி ஆஃபர்கள், தள்ளுபடி அறிவித்து ஒட்டுமொத்த டெலிகாம் நிறுவனத்தையே புரட்டி போட்டது. இதன் அதிர்வுகளே இன்னும் குறையாத நிலையில், ஜியோ உடனான சண்டை மீண்டும் வீதிக்கு வந்துள்ளது.
ஏர்டெல், ஐடியா, வோடபோன் நிறுவனங்கள் ஜியோ-வின் அறிமுக காலம் முதலே தொடர்ந்து சண்டை போட்டு வருகிறது. தற்போது இந்த சண்டை புதிய உச்சதை அடைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
டிராய்
செவ்வாய்கிழமை டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் ஒரு வொர்க் ஷாப் நடத்தியது. இதில் ரிலையன்ஸ் ஜியோ இந்திய டெலிகாம் துறையில் இண்டர்கனெக்ஷன் யூசர் சார்ஜ் விதிப்பதை முழுமையாக நீக்கி விட வேண்டும். இதன் மூலம் இந்திய டெலிகாம் துறை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என பரிந்துரையை வைத்தது.
அதிரடி எதிர்ப்பு
ஜியோ நிறுவனத்தின் இந்த பிரிந்துரைக்கு ஏர்டெல், ஐடியா, வோடபோன் ஆகிய நிறுவனங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது மட்டும் அல்லாமல் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என ஜியோ நிறுவனத்தின் பரிந்துரைக்கு நேர் எதிராக கோரிக்கை விடுத்தது.
ஜியோவின் இந்த பிரிந்துரைக்கும், ஏர்டெல், ஐடியா, வோடபோன் நிறுவனங்களின் எதிர்ப்புக்கும் முக்கிய காரணம் உண்டு.
ஜியோ
இந்திய டெலிகாம் சந்தையில் புதிதாக களமிறங்கியுள்ள ஜியோ தனது 80 சதவீத அழைப்புகளை பிற நிறுவனங்களிடம் வாங்கப்பட்ட இண்டர்கனெக்ஷன் பாயின்ட் மூலமாக மட்டுமே இணைத்து வருகிறது. இதற்காக ஜியோ அனைத்து நிறுவனங்களுக்கும் இணைப்பு கட்டணம் அதாவது யூசர் சார்ஜ் அளித்து வருகிறது.
முழுமையான நீக்கம்
இது ஜியோ நிறுவனத்தின் செலவுகளில் மிகப்பெரிய ஒன்று. இத்தகைய செலவு செய்ய காரணம் ஜியோவிடம் முழுமையான டெலிகாம் டவர் இணைப்புகள் இல்லை.
இதனை முழுமையாக நீக்கவே ஜியோ டிராய் அமைப்பிடம் பரிந்துரை செய்தது.
இண்டர்கனெக்ஷன் யூசர் சார்ஜ்
இண்டர்கனெக்ஷன் யூசர் சார்ஜ் என்பது, அழைப்பு உருவாக்கப்படும் நிறுவனம் இணைக்கப்படும் நிறுவனத்திற்கு 14 பைசா கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
ஆதாவது ஜியோ நிறுவனத்தில் இருந்து நீங்கள் ஏர்டெல் நம்பர் கொண்டு நபருக்கு அழைத்தால், ஜியோ ஏர்டெல் நிறுவனத்திற்கு 14 பைசா அளிக்க வேண்டும். இதுவே இண்டர்கனெக்ஷன் யூசர் சார்ஜ்.
யாருக்கு லாபம்..?
இந்த முறையின் மூலம் யார் பெரிய நெட்வொர்க் வைத்துள்ளார்களோ அவர்களுக்கே அதிக லாபம். இது போன்ற டெலிகாம் நெட்வொர்க் இல்லாத நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பாக உள்ளது.
அதுமட்டும் அல்லாமல் புதிய மற்றும் சிறு டெலிகாம் நிறுவனங்களுக்கு இது பெரிய சுமையாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கட்டண உயர்வு தேவை..
இந்நிலையில் ஜியோவின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்போது இருக்கும் 14 பைசா என்ற அளவை மாற்றி குறைந்தபட்சம் 30 பைசாவாக உயர்த்த வேண்டும் என ஏர்டெல், ஐடியா, வோடபோன் ஆகிய நிறுவனங்கள் பரிந்துரை செய்துள்ளது.
டிராய் முடிவு..
எதிர்ப்புகள் வலுத்த நிலையில் டிராய் அமைப்பு இண்டர்கனெக்ஷன் யூசர் சார்ஜ் அளவை மாற்றப்படாது என அறிவித்துள்ளது
வருவாய் இழப்பு
ஒரு நிறுவனம் மற்ற நிறுவனத்திற்கு அழைப்புகளை இணைக்கும் போது, அதற்கான கட்டணத்தை தத்தம் நிறுவனம் செலுத்த வேண்டும். இதனால் ஏற்படும் இழப்பீடு மிகவும் அதிகம் என்பதால் இதற்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என ஏர்டெல், ஐடியா, வோடபோன் கூறியது.
இந்த கட்டணத்தை குறைத்தால், டெலிகாம் நிறுவனங்களின் வருவாய் மேலும் பாதிக்கப்படும்.
வியாழக்கிழமை
டிராய் அமைப்பு இதற்கான ஆலோசனையை வியாழக்கிழமை நடத்த உள்ளது. இதில் டெலிகாம் நிறுவனங்களின் கட்டண விதிப்புகளை ஆய்வு செய்து அதன் பின் இறுதி முடிவுகளை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது டிராய்.
டிராய் ஜியோவின் பரிந்துரைக்கு சாதகமான அறிவிப்புகளை வெளியிட அதிகளவில் வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications