ஜனவரி மாதம் மத்திய அரசு, வேமாக வளர்ந்து வரும் நாட்டின் டெலிகாம் சந்தையை ஊக்குவிக்கும் வகையில், 2,000 ரூபாய் மதிப்பிலான 4ஜி ஸ்மார்ட்போன்களை மானிய விலையில் மக்களுக்கு விற்பனை திட்டமிட்டது.
இதற்காக இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.
அதன்பின் இந்த திட்டம் குறித்து எவ்விதமான அறிவிப்புகளும் இல்லாத நிலையில், இதே திட்டத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் புதிய டெலிகாம் நிறுவனமான ஜியோ காப்பி அடித்துள்ளது (முழுமையாக பயன்படுத்திக்கொண்டது).
ஜியோ
மத்திய அரசின் அழைப்பை ஏற்றுவந்த இந்திய நிறுவனங்களில், இத்திட்டத்திற்கு மிகவும் ஆர்வம்காட்டிய இன்டெக்ஸ் நிறுவனம் தான் தற்போது ஜியோவின் 500 ரூபாய் மதிப்புடைய 4ஜி பியூச்சர் போனை தயாரிக்கிறது.
ஒப்பந்தம்
சீன நிறுவனத்துடன் சேர்ந்து 500 ரூபாய்க்கு பியூச்சர் போன் தயாரிக்க திட்டமிட்டு இருந்த ஜியோ, தற்போது திடிரென இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனமான இன்டெக்ஸ் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆகஸ்ட்
இந்திய டெலிகாம் சந்தையை தலைகீழாக புரட்ட வரும் ஜியோவின் 500 ரூபாய்க்கு பியூச்சர் போன் வருகிற ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மேக் இன் இந்தியா
ஜியயோ மற்றும் இன்டெக்ஸ் நிறுவன கூட்டணியில் உருவாகும் இந்த 4ஜி பியூச்சர் போனுக்கான விலையை ஜியோ மட்டுமே நிர்ணயம் செய்யும், நிர்ணயம் செய்யப்படும் விலைக்கும் அதிகமான தொகையை ஜியோ மாணியமாக அளிக்கும்.
மேலும் இந்த போனை சந்தைப்படுத்துவதும் ஜியோ நிறுவனம் மட்டும் தான் என்பதால், இன்டெக்ஸ் நிறுவனம் தயாரிப்பு பணிகளில் மட்டுமே ஈடுப்படும்.
பல்வேறு வாடிக்கையாளர்கள்
ஜியோ இந்த 4ஜி போனை இன்டெக்ஸ் நிறுவனத்துடன் மட்டும் அல்லாமல் உலகின் பல்வேறு நிறுவனத்திடமும் இருந்து பெறுகிறது. குறிப்பாக சீன நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செயய் உள்ளது ஜியோ.
இத்திட்டம் ஜியோ தளத்தில் புதிய வாடிக்கையாளர்களை பெரிய அளவில் சேர்ப்பதற்கு மிகப்பெரிய வாய்ப்பாகும்.
சீன நிறுவனம்
தற்போதைய நிலையில் ஜியோ நிறுவனம் சீனாவின் somIntexe என்ற நிறுவனத்துடன் 20 மில்லியன் போன்களை ஆர்டர் செய்துள்ளது.
மற்ற இந்திய நிறுவனங்கள்
இன்டெக்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்த ஜியோ எவ்வளவு போன்களை ஆர்டர் செய்துள்ளது என தெரிவிக்கவில்லை.
இதேபோல் ஜியோ மைக்ரோமேக்ஸ் மற்றும் லாவா ஆகிய நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆக ஜியோ நிறுவனம் இத்திட்டத்தை மிகப்பெரிய அளவில் அறிமுகம் செய்யபோகிறது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications