கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆல் இந்தியா ரேடியோவில் ஒவ்வொரு மாதமும் பிரதமர் மோடி அவர்கள் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலமாகக் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றார்.
இந்த நிகழ்ச்சியினால் ஆல் இந்தியா ரேடியோவிற்கு 10 கோடிகள் வரை வருமானம் கிடைத்துள்ளதாக மக்களவை புதன்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016-2017 நிதி ஆண்டு
2016-2017 நிதி ஆண்டில் இந்த நிகழ்ச்சியினை அலைபரப்பு செய்ததற்காக ஆல் இந்தியா ரேடியோவிற்குக் கிடைத்த வருவாய் 5.19 கோடி ரூபாய் ஆகும்.
2015-2016 நிதி ஆண்டு
இதுவே 2015-2016 நிதி ஆண்டில் அலைபரப்பு செய்ததற்காக ஆல் இந்தியா ரேடியோவிற்கு 4.78 கோடிகள் வரை வருவாய் கிடைத்துள்ளது என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் ராத்தோர் எழுத்துப்பூர்வமாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்துள்ளார்.
பிராந்திய மொழிகள்
மோடி உரையாற்றிய பிறகு 18 மொழிகள் மற்றும் 33 பேச்சுவழக்குகளில் அதே நாள் இந்த நிகழ்ச்சி அலைவரிசை செய்யப்படுகின்றது.
அங்கிலம் மற்றும் சமஸ்கிரதம்
இவை மட்டும் இல்லாமல் ஆங்கிலம் மற்றும் சமஸ்கிரதம் மொழிகளிலும் மான் கி பாத் நிகழ்ச்சி அலைவரிசை செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இணையதளத்திலும் கேட்கலாம்
உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களும் மோடியின் உரையினைக் கேட்க வேண்டும் என்பதற்காக இணையதளம், ஷாட் வேவ் டிரான்சிஸ்டர்கள் உள்ளிட்ட அலைவரைகளின் உதவியுடனும் அலைபரப்புச் செய்யப்பட்டுள்ளதாக ரத்தோர் நமக்குத் தெரிவித்தார்.
மன் கி பாத் எப்போது துவங்கப்பட்டது?
பிரதமர் மோடி அவர்களின் இந்த மன் கி பாத் உரை 2014 அக்டோபர் 3-ம் தேதி முதல் துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications