நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் ரிலையனஸ் இண்டஸ்ட்ரீஸ் வெள்ளிக்கிழமை தனது 40வது வருடாந்திர கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் ஜியோ நிறுவனத்தின் இலவச 4ஜி பியூச்சர் போன் குறித்து அறிவிப்பு, மக்களை மட்டுமல்ல இந்திய சந்தையில் இருக்கும் பிற டெலிகாம் நிறுவனங்களை ஆட்டியுள்ளது.
டெலிகாம் சந்தை
ஜியோ போன், ஜியோ கேபிள் டிவி எனப் பல அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் கட்டணங்களும் சந்தையில் இருக்கும் பிற நிறுவனங்களை விடவும் மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால், டெலிகாம் சந்தையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் அனைத்து அதிகளவில் சரிவை பங்குச்சந்தையில் சந்தித்துள்ளது.
ஏர்டெல்
ஜியோவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்திய டெலிகாம் சந்தையில் மிகப்பெரிய நிறுவனமாக விளங்கும் ஏர்டெல் இன்று மும்பை பங்குச்சந்தையில் 3 சதவீதம் வரை சரிந்துள்ளது.
இதன் காரணமாக இந்நிறுவனத்தின் பங்குகள் 417 ரூபாயில் இருந்து 403.00 ரூபாய் வரை குறைந்துள்ளது.
ஜடியா
பிர்லா குழுமத்தின் ஐடியா நிறுவனம் வோடபோன் கூட்டணியால் இதுநாள் வரை சரிவில் இருந்து தப்பித்து வந்த நிலையில், ஜியோவின் இன்றைய அறிவிப்பில் இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 6 சதவீதம் வரை சரிந்துள்ளது.
இதனால் இன்றைய ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் இந்நிறுவனத்தின் பங்குகள் 95.50 ரூபாயில் இருந்து 88.25 ரூபாயாகக் குறைந்துள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
இதேபோல் இந்திய டெலிகாம் சந்தையில் மற்றொரு முன்னணி நிறுவனமாகத் திகழும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 2 சதவீதம் வரையிலான சரிவை சந்தித்துள்ளது.
இது முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானி தலைமை வகிக்கும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற நிறுவனங்கள்
இதைத் தொடர்ந்து ஜிடிஎல் இன்பரா, டிடிஎம்எல், டாடா கம்யூனிகேஷன்ஸ், எம்டிஎன்எல், ஆன்மொபைல் என அனைத்து நிறுவனங்களும் சரிவை சந்தித்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 40வது வருடாந்திர கூட்டத்தைத் தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1544.40 ரூபாயில் இருந்து 1588.20 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
புது கணக்கு
வேலைவாய்ப்பு
கேபிள் டிவி
ஆகஸ்ட் 24 முதல் ஆரம்பம்
போனஸ் பங்குகள்


Click it and Unblock the Notifications